மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

டி20 கிரிக்கெட்டில் 9,000 ரன்கள்..! சஞ்சு சாம்சன் அரைசதம் அடித்த 11 முறையும் இந்தியா 100% வெற்றி!

டி20 கிரிக்கெட்டில் அசத்தும் சஞ்சு சாம்சன் சாதனைகள் குறித்து...

Sanju Samson

சிஎஸ்கே வெளியிட்ட சஞ்சு சாம்சன் போஸ்டர்கள் - படம்: எக்ஸ் / பிசிசிஐ, சிஎஸ்கே

Published On :

டி20 கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சன் 9000 ரன்களை கடந்து அசத்தியுள்ளார். இந்தியாவுக்காக அவர் டி20 கிரிக்கெட்டில் 11 முறை அரைசதத்தை கடக்கும்போது அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வென்றுள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. டி20 தொடரை 3-0 என முழுமையாக வென்று அசத்தியது.

இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் அரைசதம் அடித்து அசத்தினார். இதற்கு முந்தைய போட்டியிலும் அரைசதம் அடித்தார்.

டி20 உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருது வென்றார். பின்னர், சில போட்டிகளில் சரியாக விளையாடவில்லை. மீண்டும் அணியில் வாய்ப்பு கிடைத்தபோது அசத்தலாக விளையாடியுள்ளார்.

ஐபிஎல் அணியில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். மொத்தமாக, இதுவரை 351 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் 9027 ரன்கள் எடுத்துள்ளார். 140 ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடும் இவரது சராசரி 30க்கும் அதிகமாக இருக்கிறது.

டி20யில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள்

1. விராட் கோலி - 14,218 ரன்கள்

2. ரோஹித் சர்மா - 12,531 ரன்கள்

3. ஷிகர் தவான் - 9,797 ரன்கள்

4. சஞ்சு சாம்சன் - 9,027 ரன்கள்

5. சூர்யகுமார் யாதவ் - 8,975 ரன்கள்

Summary

9,000 runs in T20 cricket! India has a 100% win record in all 11 matches where Sanju Samson scored a half-century!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.