
‘வைபவ் சூர்யவன்ஷி வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும்’- கௌதம் கம்பீர்
வைபவ் சூர்யவன்ஷி வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும் என்று இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளதைப் பற்றி...

சூர்யவன்ஷி - கம்பீர்.
வைபவ் சூர்யவன்ஷி வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும் என்று இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்றிருந்தார். அயர்லாந்துக்கு எதிரான தொடரில் விளையாடவில்லை என்றாலும், இங்கிலாந்து தொடரில் விளையாடி அவர் சரியாக சோபிக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரில் இடம்பெற்றிருந்த சூர்யவன்ஷி, தனது அதிரடியைத் தொடர்ந்தார். மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு அரைசதங்கள் விளாசிய சூர்யவன்ஷி, 151 ரன்கள் குவித்திருந்தார்.
முதல் போட்டியில் 19 பந்துகளில் 50 ரன்கள் விளாசியிருந்த அவர், இரண்டாவது போட்டியில் 9 பந்துகளில் 20 ரன்களும், மூன்றாவது போட்டியில் 49 பந்துகளில் 81 ரன்களும் எடுத்து சதத்தை நழுவ விட்டிருந்தாலும், தொடர் நாயகன் விருதைக் கைப்பற்றினார்.
இந்த நிலையில், சமீபத்திய காலங்களில் டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தாலும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகளில் ஒன்றில்கூட சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரி விளையாடியது. இதில், முதலிரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்ற நிலையில், மூன்றாவது போட்டியில் சஞ்சு சாம்சன் அல்லது அபிஷேக் சர்மா இருவரும் ஒருவருக்குப் பதிலாக வாய்ப்பு சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அதேநேரத்தில், மூன்றாவது போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அபிஷேக் சர்மா 30 பந்துகளில் சதமும், சஞ்சு சாம்சன் அரைசதமும் விளாசினர்.
இதுகுறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், “வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணியில் தனக்கான வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும். அவரிடம் இருக்கும் திறமை, அவரால் என்ன செய்ய முடியும் என்பது நமக்குத் தெரியும். ஆனால், பல ஆண்டுகளாக தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் ஒருவருக்கு, புதிதாக அணிக்குள் வந்த ஒருவரைவிட எப்போதும் அதிக முன்னுரிமை அளிக்கப்படும்.
வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கிடைக்கும்போது, அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படும். இந்திய கிரிக்கெட் அணியின் அமைப்பே அதுதான். அது 15 வயது வீரராக இருந்தாலும் சரி, 30 வயது வீரராக இருந்தாலும் சரி, வாய்ப்புக்காகக் காத்திருக்க வேண்டும்” என்றார்.
Summary
Gautam Gambhir said Vaibhav Sooryavanshi will have to wait for his opportunity to be back in the Indian T20I team. Sooryavanshi wasn't used for a single game during the series against Afghanistan.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






