
ஆப்கனுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா?
இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் கடைசி டி20 போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி விளையாடுவாரா என்பது குறித்து...

வைபவ் சூர்யவன்ஷி - AFP
இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் கடைசி டி20 போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி (15 வயது) விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி ஏற்கெனவே 2-0 என வென்றுள்ளது. கடைசி டி20 போட்டி இந்திய நேரப்படி இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெற இருக்கிறது.
முதலிரண்டு போட்டிகளில் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. கடைசி போட்டியில் வாய்ப்பு அளிக்க கௌதம் கம்பீர் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுவரை 6 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள வைபவ் சூர்யவன்ஷி 193 ரன்கள் குவித்துள்ளார். அதில் 2 அரைசதங்கள் அடித்துள்ளார்.
அதிரடியான வீரரான இவர் சர்வதேச டி20 போட்டிகளில் 16 பவுண்டரிகள், 14 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இந்த நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி போட்டியில் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
முன்னதாக இந்தியாவின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் அளித்த பேட்டியில் அனைத்து வீரர்களையும் புதிய ஆடுகளத்தில் விளையாட முயற்சிக்கிறோம் எனக் கூறியிருந்தார். தொடரை வென்றதால் சூர்யவன்ஷி நிச்சயமாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி விவரங்கள்: சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா, ஷிவம் துபே, நிதீஷ் குமார், ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் படேல், ஜஸ்ப்ரீத் பும்ரா, யஷ் தாக்குர், அர்ஷ்தீப் சிங், ரவி பிஸ்னோய், வைபவ் சூர்யவன்ஷி.
Summary
Will Vaibhav Sooryavanshi be given a chance in the final T20 match against Afghanistan?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







