
57 ஆண்டுகால சாதனையை முறியடித்து துலீப் டிராபியில் வரலாறு படைத்த சூர்யவன்ஷி!
துலீப் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் இளம் வயதில் அரைசதம் விளாசி வைபவ் சூர்யவன்ஷி வரலாறு படைத்துள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷி (கோப்புப் படம்)
துலீப் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் இளம் வயதில் அரைசதம் விளாசி வைபவ் சூர்யவன்ஷி வரலாறு படைத்துள்ளார்.
துலீப் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் சென்ட்ரல் ஸோன் மற்றும் ஈஸ்ட் ஸோன் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய சென்ட்ரல் ஸோன் அணி முதல் இன்னிங்ஸில் 266 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஈஸ்ட் ஸோன் அணியும் அதன் முதல் இன்னிங்ஸில் 266 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி!
ஈஸ்ட் ஸோன் அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினார். இதன் மூலம், துலீப் டிராபி வரலாற்றில் மிகவும் இளம் வயதில் (15 வயது, 157 நாள்கள்) அரைசதம் விளாசி வைபவ் சூர்யவன்ஷி வரலாறு படைத்துள்ளார்.
அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய வைபவ் சூர்யவன்ஷி 81 பந்துகளில் 92 ரன்கள் எடுத்து 8 ரன்களில் சதம் விளாசும் வாய்ப்பை தவறவிட்டார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும்.
இதற்கு முன்பாக கடந்த 1969 ஆம் ஆண்டு துலீப் டிராபி கிரிக்கெட் தொடரில் லக்ஷ்மன் சிங் 16 வயதில் (16 வயது, 23 நாள்கள்) அரைசதம் விளாசியதே இதுவரையிலான சாதனையாக இருந்தது. அந்த சாதனையை முறியடித்து சூர்யவன்ஷி வரலாறு படைத்துள்ளார்.
8 ரன்களில் சதம் விளாசும் வாய்ப்பை தவறவிட்டதால், துலீப் டிராபில் சதம் விளாசிய இளம் வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சூர்யவன்ஷி நூலிழையில் தவறவிட்டார். கடந்த 1990/91 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற துலீப் டிராபி கிரிக்கெட் தொடரில் சச்சின் டெண்டுல்கர் 17 வயதில் (17 வயது, 262 நாள்கள்) சதம் விளாசியது குறிப்பிடத்தக்கது.
Summary
Vaibhav Suryavanshi has made history by scoring a half-century at a very young age in the history of Duleep Trophy cricket.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







