துலீப் கோப்பை: 9 விக்கெட்டுகள் வீழ்த்திய ஆபித் முஷ்டக்..! அரையிறுதியில் வடக்கு மண்டலம்!
துலீப் கோப்பை காலிறுதியில் வென்ற வடக்கு மண்டலம் அணி குறித்து...

ஆபித் முஷ்டக் - படம்: எக்ஸ் / பிசிசிஐ டொமஸ்டிக்
துலீப் கோப்பை காலிறுதியில் வடக்கு மண்டலம் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் வடக்கு மண்டலம் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
துலீப் கோப்பை இரண்டாவது காலிறுதிப் போட்டியில் வடக்கு மற்றும் மேற்கு மண்டல அணிகள் மோதின. இதில் வடக்கு மண்டல அணி டாஸ் வென்று பேட்டிங் செய்தது. முதல் முதல் இன்னிங்ஸில் 251 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
மேற்கு மண்டலம் தனது முதல் இன்னிங்ஸில் 187 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, வடக்கு மண்டல அணி இரண்டாவது இன்னிங்ஸில் 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
காலிறுதிப் போட்டியில் வெல்ல, 287 ரன்கள் தேவையான நிலையில் மூன்றாம் நாள் முடிவில் மேற்கு மண்டல அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்திருந்தது.
நான்காம் நாளான இன்று 234 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இந்தப் போட்டியில் மேற்கு மண்டல அணி சார்பில் ஆபித் முஷ்டக் முதல் இன்னிங்ஸில் 5, இரண்டாம் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் என 9 விக்கெட்டுகள் எடுத்து ஆட்டத்தை மாற்றினார்.
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஆபித் முஷ்டக் இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்றார். அரையிறுதியில் இந்த அணி தெற்கு மண்டலத்துடன் ஆக.30ல் மோதுகிறது.
Victory for North Zone ð
— BCCI Domestic (@BCCIdomestic) August 26, 2026
They bowl West Zone out for 234 to win by 52 runs and enter the semis ð
Scorecard â¶ï¸ https://t.co/cATggoXuky#DuleepTrophy pic.twitter.com/EgdEtRJxnK
Summary
Abid Mushtaq 9 wickets North Zone won by 52 runs in Duleep Trophy quarter finals
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





