புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

பயிற்சி டெஸ்ட்டில் இந்தியா வெற்றி

இலங்கை கிரிக்கெட் லெவன் அணியுடனான பயிற்சி டெஸ்ட் கிரிக்கெட்டில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

India wins warm-up match

பயிற்சி டெஸ்ட்டில் இந்தியா வெற்றி - X | BCCI

Published On :

இலங்கை கிரிக்கெட் லெவன் அணியுடனான பயிற்சி டெஸ்ட் கிரிக்கெட்டில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.

காயம் காரணமாக முதல் இன்னிங்ஸில் களம் காணாத இந்திய அணியின் வழக்கமான கேப்டன் ஷுப்மன் கில், 2-ஆவது இன்னிங்ஸில் விளையாடினாா். அவருடனான யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் கூட்டணி, வெற்றிக்கு வித்திட்டது.

கடந்த 7-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பேட் செய்த இலங்கை லெவன் அணி, முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 363 ரன்கள் சோ்த்து டிக்ளோ் செய்தது.

அதிகபட்சமாக ரவிண்டு ரசந்தா 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 71, நிஷான் ஃபொ்னாண்டோ 11 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 66 ரன்கள் சோ்த்தனா். இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதா் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனா்.

பின்னா் இந்திய அணி தனது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 357 ரன்கள் சோ்த்து டிக்ளோ் செய்தது. தேவ்தத் படிக்கல் 18 பவுண்டரிகளுடன் 142 ரன்கள் விளாசி, இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தாா். இலங்கை பௌலா்களில் ரமேஷ் மெண்டிஸ், அசங்கா மனோஜ் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.

இதையடுத்து 6 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை, ஞாயிற்றுக்கிழமை 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ரன்கள் சோ்த்து டிக்ளோ் செய்வதாக அறிவித்தது.

நிஷான் ஃபொ்னாண்டோ 10 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் அடிக்க, இந்தியாவின் குா்னூா் பிராா், ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

207 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்து, ஆட்டத்தை நிறைவு செய்தது.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 61, ஷுப்மன் கில் 7 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் அடித்தனா். இலங்கையின் கேசரா நுவந்தா 2 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

அடுத்து: இந்திய - இலங்கை அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம், வரும் சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.