இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான பிரதான போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு, இரு அணிகளும் தங்களுக்குள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடின.
இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 363 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய, இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 357 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியைக் காட்டிலும் 6 ரன்கள் என்ற முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இலங்கை அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்திருக்கையில் டிக்ளேர் செய்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணியில் அதிகபட்சமாக நிஷான் மதுஷ்கா 63 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, நிபுன் தனஞ்ஜெயா 46 ரன்களும், அஞ்சலா பந்தாரா 35 ரன்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில் குர்னூர் பிரார் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
207 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
இந்திய அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 61 ரன்கள், ஷுப்மன் கில் 44 ரன்கள் எடுத்தனர். முகமது சிராஜ் 32 ரன்கள், ரிஷப் பந்த் 28 ரன்கள் எடுத்தனர்.
இந்தியா - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி தொடங்குகிறது.
Summary
The Indian team won the warm-up match against Sri Lanka by six wickets.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியா - இலங்கை பயிற்சி ஆட்டம்: ஒரே ஓவரில் 4 சிக்ஸர்கள் விளாசிய குர்னூர் பிரார்!

பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி!

இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் சதம் விளாசிய தேவ்தத் படிக்கல்!






