கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திலிருந்து இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் விலகியுள்ளார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருக்கிறது. இந்தத் தொடர் வருகிற ஆக. 15 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றன.
இவ்விரு அணிகளும் மோதும் பயிற்சி ஆட்டம் இன்று (ஆக. 7) காலை தொடங்கிய நிலையில், பயிற்சியில் கட்டை விரல் காயத்திலிருந்து விலகிய இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக விக்கெட் கீப்பர் கே.எல். ராகுல் அணியை வழிநடத்துகிறார்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் மூன்று நாள்கள் பயிற்சி ஆட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடி வருகிறது.
முதல் நாள் ஆட்டத்தில் 68 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 269 ரன்கள் குவித்திருக்கிறது. அதிகபட்சமாக ரவிந்து ரசந்தா 71 ரன்களும், நிஷான் மதுஷ்கா 71 ரன்களும் எடுத்தனர். இந்திய அணித் தரப்பில் ரவீந்திர ஜடேஜா, குர்நூர் பிரார், குல்தீப் யாதவ், மனவ் சுதர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.
டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில், பயிற்சி ஆட்டத்தைத் தவறவிட்ட கேப்டன் ஷுப்மன் கில் முதல் போட்டியில் விளையாடுவாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
Summary
India captain Shubman Gill will not take the field on the opening day of the practice match against SLC XI here on Friday after sustaining an injury to his right finger during practice.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியாவின் வருங்காலத்திற்காக... ஷுப்மன் கில் மாணவர்களுக்கு ஆதரவு!

ஓய்வு பெறுவது குறித்து எங்களிடம் ரோஹித் சர்மா எதுவும் கூறவில்லை: ஷுப்மன் கில்

அழுத்தத்தை இப்படிதான் கையாள்கிறேன்; ரகசியம் பகிர்ந்த ஷுப்மன் கில்!

ஆட்டத்தின் பாதியில் பெவிலியன் திரும்பிய ஷுப்மன் கில்; காரணம் என்ன?
விடியோக்கள்
பிரசாந்த் கிஷோர் வெற்றிப் பின்னணி...| Ravindran duraisamy Interview | Prashant Kishor | Jan Suraaj | Bankipur | Bjp



