இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் மாணவர்களுக்கு ஆதரவு அளித்து தனது இன்ஸ்டா பக்கத்தில், “அமைதியாக தங்கள் கோரிக்கைகளை வைக்கும் இளைஞர்கள் மீது மிகுந்த மரியாதை இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் (சிஜேபி) தில்லியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
காவல்துறையின் தடியடி, புகைக் குண்டு வீச்சுகளுக்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்தார்கள். மாணவர்கள் போராட்டத்துக்கு திரைப்பிரபங்களைத் தொடர்ந்து விளையாட்டு வீரர்களும் ஆதரவு அளித்து வருகிறார்கள்.
இந்திய அணியின் ஒருநாள், டெஸ்ட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பதாவது:
ஓர் இளம் இந்தியனாக, நமது தலைமுறையினர் கற்கவும் கனவு காணவும் நாம் விரும்பியதை அடையவும் அனைத்து வாய்ப்புகளும் இருக்கிறதென நான் நம்புகிறேன்.
அமைதியாக தங்கள் போராட்டத்தை வெளிப்படுத்தி வரும் அனைத்து இளைஞர்கள் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது.
நமது நாட்டின் வருங்காலத்தை வடிவமைக்கும் சக்தி கல்விக்கு இருக்கிறது. நாம் இதே உணர்வுடன் முன்னேறுவோம் எனவும் இருதரப்பு மரியாதையுடன் இதயத்தில் அனைத்து மாணவர்களின் நலனையும் புரிந்துகொள்வோம் எனவும் நம்புகிறேன். இந்தியாவின் வருங்காலத்திற்காக... எனக் கூறியுள்ளார்.
Summary
I believe our generation deserves every opportunity Instagram story by Indian captain shubman gill
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓய்வு பெறுவது குறித்து எங்களிடம் ரோஹித் சர்மா எதுவும் கூறவில்லை: ஷுப்மன் கில்

அழுத்தத்தை இப்படிதான் கையாள்கிறேன்; ரகசியம் பகிர்ந்த ஷுப்மன் கில்!

ஆட்டத்தின் பாதியில் பெவிலியன் திரும்பிய ஷுப்மன் கில்; காரணம் என்ன?

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 3000 ரன்கள் குவித்து ஷுப்மன் கில் சாதனை!
விடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay




