16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 3000 ரன்கள் குவித்து ஷுப்மன் கில் சாதனை!

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 3000 ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் படைத்துள்ளார்.

Shubman Gill smashing the ball for a six.

பந்தை சிக்ஸருக்கு விளாசும் ஷுப்மன் கில் - படம் | பிசிசிஐ (எக்ஸ்)

Published On :

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 3000 ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் படைத்துள்ளார்.

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான முதல் ஒருநாள் போட்டி தரம்சாலாவில் நேற்று (ஜூன் 13) நடைபெற்றது. ஆட்டம் மழை காரணமாக 25 ஓவர்களாக குறைத்து நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் 66 பந்துகளில் 84 ரன்கள் (11 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

நேற்றையப் போட்டியில் 84 ரன்கள் எடுத்ததன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 3000 ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை ஷுப்மன் கில் படைத்தார். அவர் 62 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 3000 ரன்கள் குவித்த வீரர்கள்

ஹாசிம் ஆம்லா - 57 இன்னிங்ஸ்களில்

ஷுப்மன் கில் - 62 இன்னிங்ஸ்களில்

சாய் ஹோப் - 67 இன்னிங்ஸ்களில்

ஃபகர் ஸமான் - 67 இன்னிங்ஸ்களில்

இமாம் உல் ஹக் - 67 இன்னிங்ஸ்களில்

Summary

Indian team captain Shubman Gill has set the record for being the fastest Indian player to amass 3,000 runs in One Day Internationals.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.