ஜூலை 15இல் விசாரணைக்கு ஆஜராவேன்: சென்னை திரும்பிய எ.வ. வேலு பேட்டி சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பில்லை “அண்ணாமலையைக் கண்டு நான் பயப்படுகிறேனா?” திருமாவளவன் பதில்! வியத்நாம் படகு விபத்து: உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர் வியத்நாம் படகு விபத்து: உயிரிழந்த 15 இந்தியர்கள் உடல்கள் எப்போது தாயகம் கொண்டு வரப்படும்?
/

இங்கிலாந்து அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி சோஃபி எக்கல்ஸ்டோன் சாதனை!

இங்கிலாந்து அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி சோஃபி எக்கல்ஸ்டோன் சாதனை படைத்துள்ளார்.

News image

சோஃபி எக்கல்ஸ்டோன் - படம் | இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Updated On :12 ஜூலை 2026, 2:50 pm IST

இங்கிலாந்து அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி சோஃபி எக்கல்ஸ்டோன் சாதனை படைத்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் திடலில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 285 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி இங்கிலாந்தைக் காட்டிலும் 115 ரன்கள் முன்னிலை பெற்றது.

115 ரன்கள் என்ற வலுவான முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 154 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம், இங்கிலாந்து அணியைக் காட்டிலும் இந்திய அணி 269 ரன்கள் முன்னிலை பெற்று வலுவாக உள்ளது.

சோஃபி எக்கல்ஸ்டோன் சாதனை!

லார்ட்ஸில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் இடதுகை சுழற்பந்துவீச்சாளரான சோஃபி எக்கல்ஸ்டோன் முதல் இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினார்.

இதன் மூலம், இங்கிலாந்து அணிக்காக அனைத்து வடிவிலான போட்டிகளையும் சேர்த்து அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். முதல் இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றியபோது அவர் இந்த சாதனையைப் படைத்தார்.

இங்கிலாந்து அணிக்காக அனைத்து வடிவிலான போட்டிகளையும் சேர்த்து சோஃபி எக்கல்ஸ்டோன் 339 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். முன்னதாக, 335 விக்கெட்டுகளுடன் கேத்தரின் ஷிவர் பிரண்ட் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்.

Summary

Sophie Ecclestone has set a record for taking the most wickets for the England team.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.