கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை: 2 பேர் மிக அருகிலிருந்து சுடப்பட்டனர்! - உடற்கூராய்வு அறிக்கை! நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்புநேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 9 பேர் பலி; 105 இந்தியர்களின் நிலை?சென்னை மாநகராட்சி: கனமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்! ஆக. 28-ல் மேட்டூர் அணை திறப்பு! முதல்வர் விஜய் வருகிறார்! ஏற்பாடுகள் முனைப்பு!13 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு! ‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிதமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

ஆதிக்கம் முடிந்தது! ஐசிசி டி20 அணிகளுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து!

சிறந்த டி20 அணியாக வலம் வந்த இந்திய அணியின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து இங்கிலாந்து அணி தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

England team players

இங்கிலாந்து அணி வீரர்கள் - படம் | இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Published On :12 ஜூலை 2026, 1:21 pm IST

சிறந்த டி20 அணியாக வலம் வந்த இந்திய அணியின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து இங்கிலாந்து அணி தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. சௌத்தாம்டனில் நேற்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. மேலும், டி20 தொடரையும் 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்திய அணியை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து அணி ஐசிசி டி20 போட்டிகளில் சிறந்த அணிகளுக்கான தவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களை இழந்ததன் மூலம் இந்திய அணி இரண்டாவது இடத்துக்கு சறுக்கியது.

கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரியில் இந்திய அணி டி20 போட்டிகளுக்கான சிறந்த அணிக்கான தவரிசையில் முதலிடம் பிடித்தது. அதன் பின், 1600 நாள்களுக்கும் மேலாக இந்திய அணி முதலிடத்தில் நீடித்தது. இந்திய அணியின் இந்த ஆதிக்கத்துக்கு இங்கிலாந்து அணி தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டிக்கு முன்பாக, டி20 போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடம் பிடிப்பதே இங்கிலாந்து அணியின் இலக்காக இருக்கும் என அந்த அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

England has risen to the top of the rankings, putting an end to the dominance of the Indian team, which had been the leading T20 side.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.