அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் வைபவ் சூர்யவன்ஷி களமிறக்கப்படாதது குறித்து இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டொஸ்சாட் விளக்கமளித்துள்ளார்.
இந்திய அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டி20 தொடரை அயர்லாந்து அணி 2-0 என முழுமையாகக் கைப்பற்றி வரலாறு படைத்தது.
ஐபிஎல் தொடரில் அதிரடியில் மிரட்டிய வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணியில் இடம்பெற்றும், பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை. தொடரை இந்திய அணி 0-2 என முழுமையாக இழந்ததால், வைபவ் சூர்யவன்ஷியை பிளேயிங் லெவனில் களமிறக்காதது பேசுபொருளாகியுள்ளது.
இந்த நிலையில், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு தயாராக இருக்கிறார். ஆனால், அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு என்ன நடைமுறையை கடைபிடிக்கிறோமோ அதனையே வைபவ் சூர்யவன்ஷி விஷயத்திலும் பின்பற்றுவதாக உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டொஸ்சாட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விளக்கமளித்ததாவது: சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு வைபவ் சூர்யவன்ஷி முற்றிலும் தயாராக இருக்கிறார். அதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. ஆனால், மூன்று மாதங்களுக்கு முன்பாக இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வெல்ல சஞ்சு சாம்சன் மிக முக்கிய பங்களிப்பை வழங்கினார். அவர் ஐபிஎல் தொடரிலும் நன்றாக விளையாடினார். அவருக்கு இந்திய அணியில் நீண்ட நாள்கள் இடம்பெற வாய்ப்பளிப்பது முக்கியம்.
நாம் அனைவரும் சர்வதேச கிரிக்கெட்டில் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்தைக் காண மிகவும் ஆர்வமாக இருக்கிறோம். ஆனால், மற்ற வீரர்கள் அறிமுகமாகும்போது பின்பற்றப்படும் அதே விஷயங்களைத்தான் சூர்யவன்ஷி விஷயத்திலும் பின்பற்றுகிறோம் என்றார்.
அண்மையில் நிறைவடைந்த ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி, 776 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
Summary
The Indian team's assistant coach has explained why Vaibhav Suryavanshi was not fielded in the T20 series against Ireland.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சச்சினின் 37 ஆண்டுகால சாதனையை முறியடிப்பாரா சூர்யவன்ஷி?

மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை; இந்திய அணிக்கு தேர்வானது குறித்து சூர்யவன்ஷி!

உங்களது அதிரடி ஆட்டத்தில் எந்த மாற்றமும் செய்யாதீர்கள்; சூர்யவன்ஷிக்கு பயிற்சியாளர் புகழாரம்!








