முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

7 ஆண்டுகளுக்குப் பிறகு... தொடர்ச்சியாக இரண்டு டி20 தொடர்களை இழந்த இந்திய அணி!

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி தொடர்ச்சியாக இரண்டு டி20 தொடர்களை இழந்துள்ளது.

News image

இந்திய அணி வீரர்கள் - படம் | பிசிசிஐ

Updated On :10 ஜூலை 2026, 7:31 pm IST

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி தொடர்ச்சியாக இரண்டு டி20 தொடர்களை இழந்துள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி நேற்று (ஜூலை 9) பிரிஸ்டாலில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இழந்ததன் மூலம் இந்திய அணி தொடர்ச்சியாக இரண்டாவது டி20 தொடரை இழந்துள்ளது.

முன்னதாக, அயர்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுமையாக இழந்த நிலையில், தற்போது இங்கிலாந்துக்கு எதிரான தொடரையும் இழந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்திய அணி முதல் முறையாக தொடர்ச்சியாக இரண்டு டி20 தொடர்களை இழந்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து டி20 தொடர்களை இந்திய அணி இழந்திருந்தது.

இங்கிலாந்து அணி டி20 தொடரை வென்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி நாளை (ஜூலை 11) நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Summary

After seven years, the Indian team has lost two consecutive T20 series.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.