ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

இந்திய அணி தொடர்ச்சியாக டி20 தொடர்களை இழக்க இதுதான் காரணம்: ஷ்ரேயாஸ் ஐயர்

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களை இழந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மனம் திறந்துள்ளார்.

News image

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருடன் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் - படம் | பிசிசிஐ

Updated On :12 ஜூலை 2026, 12:21 pm IST

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களை இழந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மனம் திறந்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த சூர்யகுமார் யாதவ், கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு அணியின் புதிய கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் அண்மையில் நியமிக்கப்பட்டார். ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி அந்த அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களை இழந்தது.

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை 0-2 என்ற கணக்கிலும், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 0-4 என்ற கணக்கிலும் இந்திய அணி இழந்தது.

இந்த நிலையில், இந்திய அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆடுகளங்களின் தன்மைக்கு ஏற்றவாறு தங்களது ஆட்டத்தை மாற்றிக் கொள்ளத் தவறியதுதான் தோல்விக்கு காரணம் என கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: நேர்மையாகக் கூறவேண்டுமென்றால், இந்த தோல்வி மிகவும் கடினமாக இருக்கவில்லை. இந்திய அணியின் கேப்டனாக எனக்கு கிடைத்துள்ள இந்த அனுபவத்தை சலுகையாக உணர்கிறேன். இந்திய அணியை கேப்டனாக வழிநடத்த வேண்டும் என அனைவருக்கும் கனவு இருக்கும். அழுத்தங்களை நான் விரும்புகிறேன். அழுத்தமான சூழல்களில் சிறப்பாக செயல்பட வேண்டும் என நான் நினைப்பேன். தற்போது என்னுடைய மனநிலை அப்படித்தான் இருக்கிறது.

நாங்கள் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளோம். அதற்கு முன்பாக, பல்வேறு நகரங்களில் விளையாடவுள்ளோம். எங்கு விளையாடுகிறோமோ அந்த இடங்களின் சூழல்களுக்கு ஏற்றவாறு உடனடியாக எங்களது ஆட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். இதுவே இந்திய அணியின் திட்டமாக இருக்கப் போகிறது. ஆடுகளங்களின் தன்மையை புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு விளையாட வேண்டும். ஆடுகளங்களின் தன்மையைப் புரிந்துகொள்ள தவறியதே தொடர்ச்சியாக இரண்டு தொடர்களை இழக்க காரணம் என்றார்.

Summary

Indian team captain Shreyas Iyer has opened up about the reasons behind losing the T20 series against Ireland and England.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.