அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி தோல்வியைத் தழுவியது.
இந்தியா - அயர்லாந்து இடையேயான முதல் டி20 போட்டி நேற்று (ஜூன் 26) நடைபெற்றது. இந்தப் போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அயர்லாந்து அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.
இதுவரை இந்திய அணிக்கு எதிராக 9 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அயர்லாந்து அணி, முதல் முறையாக வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது. இந்திய அணியின் கேப்டனாக அண்மையில் நியமிக்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர், கேப்டனாக அவரது முதல் போட்டியிலேயே தோல்வியை சந்தித்துள்ளார்.
ஷ்ரேயாஸ் ஐயருக்கு முன்பாக டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட பிரபல இந்திய வீரர்கள் பலரும் அவர்களது முதல் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளனர். அந்த வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயரும் இணைந்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தவர்கள்
விராட் கோலி - இங்கிலாந்துக்கு எதிராக, 2017
ரிஷப் பந்த் - தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, 2022
ஷுப்மன் கில் - ஜிம்பாப்வேவுக்கு எதிராக, 2024
ஷ்ரேயாஸ் ஐயர் - அயர்லாந்துக்கு எதிராக, 2026
Summary
The Indian team, led by Shreyas Iyer, suffered a defeat in the first T20 match against Ireland.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








