ஒருநாள் போட்டிகளில் இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் 3000 ரன்களைக் கடந்துள்ளார்.
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று (ஜூன் 17) லக்னௌவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 170 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி 403 ரன்கள் என்ற இமாலய இலக்கை ஆப்கானிஸ்தானுக்கு நிர்ணயிக்க, அந்த அணி 232 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் சதம் விளாசி அசத்தினர். ஷுப்மன் கில் 154 ரன்களும், இஷான் கிஷன் 125 ரன்களும் எடுத்தனர்.
3000 ரன்களைக் கடந்த ஷ்ரேயாஸ் ஐயர்!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் 26 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் அவர் 3000 ரன்களைக் கடந்துள்ளார்.
A special milestone ð
— BCCI (@BCCI) June 17, 2026
3ï¸â£0ï¸â£0ï¸â£0ï¸â£ runs and counting for Shreyas Iyer in ODIs ðð
Updates â¶ï¸ https://t.co/JYJ5l44iJ6#TeamIndia | #INDvAFG | @IDFCFIRSTBank | @ShreyasIyer15 pic.twitter.com/5NXjJmuRYT
இதுவரை இந்திய அணிக்காக 78 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஷ்ரேயாஸ் ஐயர் 3015 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 23 அரைசதங்கள் மற்றும் 5 சதங்கள் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 128 ஆக உள்ளது.
நேற்றையப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (ஜூன் 20) சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெறுகிறது.
Summary
Indian player Shreyas Iyer has crossed the 3,000-run mark in One Day Internationals.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










