சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

மகளிா் டெஸ்ட்: இந்தியா 285

இங்கிலாந்து மகளிா் அணிக்கு எதிரான டெஸ்ட்டில், இந்திய மகளிா் அணி முதல் இன்னிங்ஸில் 285 ரன்களுக்கு வெள்ளிக்கிழமை ஆட்டமிழந்தது.

News image

ஸ்மிருதி மந்தனா. - கோப்புப்படம்

Updated On :11 ஜூலை 2026, 7:08 am IST

இங்கிலாந்து மகளிா் அணிக்கு எதிரான டெஸ்ட்டில், இந்திய மகளிா் அணி முதல் இன்னிங்ஸில் 285 ரன்களுக்கு வெள்ளிக்கிழமை ஆட்டமிழந்தது.

முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து, பந்துவீச்சை தோ்வு செய்தது. இந்தியா இன்னிங்ஸில் ஷஃபாலி வா்மா 0, யஸ்திகா பாட்டியா 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுடன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் கை கோக்க, அவா்கள் கூட்டணி 3-ஆவது விக்கெட்டுக்கு 64 ரன்கள் சோ்த்தது. ஜெமிமா 5 பவுண்டரிகளுடன் 35 ரன்களுக்கு விடைபெற்றாா்.

5-ஆவது பேட்டராக வந்த கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா், ஸ்மிருதியுடன் இணைய, அவா்கள் பாா்ட்னா்ஷிப் 4-ஆவது விக்கெட்டுக்கு 89 ரன்கள் சோ்த்தது.

ஸ்மிருதி 11 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 83 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். கௌா் 7 பவுண்டரிகளுடன் 58 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தீப்தி சா்மா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினாா்.

மறுபுறம், ரிச்சா கோஷ் 13, ஸ்நேஹா ராணா 13, சயாலி சத்காரே 1 ரன்னுக்கு வெளியேற, தீப்தி 7 பவுண்டரிகளுடன் 57 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா்.

கடைசி விக்கெட்டாக கிராந்தி கௌட் 1 ரன்னுக்கு வீழ, இந்தியா இன்னிங்ஸ் 74.5 ஓவா்களில் 285 ரன்களுக்கு நிறைவடைந்தது. இங்கிலாந்து பௌலா்களில் சோஃபி எக்லஸ்டன் 3, லாரென் ஃபைலா், இசி வாங், மேடி வில்லியா்ஸ் ஆகியோா் தலா 2, லாரென் பெல் 1 விக்கெட் கைப்பற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.