இந்திய மகளிரணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா டெஸ்ட் போட்டிக்கு நடுவில் மாதவிடாய் ஏற்பட்டது குறித்து பேசியிருப்பதாவது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
டெஸ்ட் போட்டி விளையாடிக்கொண்டிருக்கும்போது ஸ்மிருதி மந்தனாவிற்கு மாதவிடாய் ஏற்பட்டதால், அவரால் பத்து நிமிஷம் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறிய நேர்காணல் விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையும் துணைக் கேப்டனுமான ஸ்மிருதி மந்தனா 8 டெஸ்ட் போட்டிகளில் 635 ரன்கள் குவித்துள்ளார். இதில் 2 சதங்கள், 3 அரைசதங்கள் உள்பட சராசரி 48.85ஆக விளையாடி இருக்கிறார்.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தான் பெண்ணாக இருப்பதால் சந்தித்த சூழ்நிலைக் குறித்து பேசியிருப்பது சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது. அவர் கூறியிருப்பதாவது:
ஒருமுறை டெஸ்ட் போட்டி விளையாடிக்கொண்டிருக்கும்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. என்னுடன் ஷெஃபாலி வர்மா விளையாடி வந்தார். அவரிடம் தெரிவித்த போது உடனே கிளம்பிச் செல் என்றார். பின்னர் நடுவரிடன் தெரிவித்து, பேட் அணிந்து வந்தேன்.
நான் இதுவரை இப்படி செய்ததில்லை. எனக்குத் தெரிந்து யாரும் இதுவரை கிரிக்கெட் திடலில் இப்படி செய்திருப்பார்களா தெரியவில்லை. எனக்காக 10 நிமிஷம் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
என்னால் மாதவிடாய் உடன் விளையாடமுடியாது. ஏனெனில் நான் வெள்ளை உடையுடன் விளையாடுகிறேன். இந்தியாவைப் பிரதிநிதிப்படுத்தி விளையாடுகிறேன். என்னால் ஏனோதானோவென்று இருக்க முடியாது என்றார்.
Summary
Smriti Mandhana Opens Up About Getting Her Period Mid-Test Debate on social media
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லார்ட்ஸ் டெஸ்ட்: ஸ்மிருதி மந்தனா மீண்டும் அசத்தல்; வலுவான நிலையில் இந்தியா!

மகளிா் டெஸ்ட்: இந்தியா 285

300-வது சர்வதேச போட்டியில் ஸ்மிருதி மந்தனா அசத்தல்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிரடியாக விளையாட வேண்டும்: ஸ்மிருதி மந்தனா
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK



