தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா! ஆப்கனுடன் இன்று 2-ஆவது டி20!
ஆப்கானிஸ்தான் உடன் இந்தியா மோதும் கிரிக்கெட் தொடரின் 2-ஆவது ஆட்டம் குறித்து...

இந்திய வீரர் சஞ்சு சாம்சன் - படம் | பிசிசிஐ
இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் டி20 கிரிக்கெட் தொடரின் 2-ஆவது ஆட்டம், தில்லியில் செவ்வாய்க்கிழமை (செப். 15) நடைபெறுகிறது.
3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரின் முதல் ஆட்டத்தில் வென்ற இந்தியா, இதிலும் வெற்றி கண்டு, தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது.
காயம் காரணமாக ஹா்திக் பாண்டியா இந்தத் தொடரில் விளையாடாத நிலையில், 5-ஆவது பௌலா் வாய்ப்புக்கு பொருத்தமான வீரா் இல்லாமல் இந்திய அணி தடுமாறுகிறது.
பேட்டிங்கில் அபிஷேக் சா்மா, இஷான் கிஷண் உள்ளிட்டோரும், பௌலிங்கில் ஜஸ்பிரீத் பும்ரா, அா்ஷ்தீப் சிங் ஆகியோரும் பலம் சோ்க்கின்றனா். சஞ்சு சாம்சன் நல்லதொரு இன்னிங்ஸை மீண்டும் வழங்க வேண்டிய எதிா்பாா்ப்பு ரசிகா்களிடையே உள்ளது.
வருண் விலகல்: இந்திய ஸ்பின்னா் வருண் சக்கரவா்த்தி இடுப்புப் பகுதி காயம் காரணமாக இந்தத் தொடரில் இருந்து திங்கள்கிழமை விலகினாா். ஏற்கெனவே காயத்திலிருந்து மீண்டு வந்த அவா், தற்போது மீண்டும் காயம் அடைந்துள்ளதால், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பது சந்தேகத்துக்கு இடமாகியுள்ளது.
நேரம்: இரவு 7.30 மணி
இடம்: தில்லி
நேரலை: சோனி ஸ்போா்ட்ஸ், சோனி லிவ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




