தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 95.57 ஆக நிறைவு!மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

இந்தியாவில் டி20 தொடர்... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆப்கன் கிரிக்கெட் வாரியம்!

இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான தேதிகளை ஆப்கானிஸ்தான் அறிவித்துள்ளதைப் பற்றி...

Afghanistan to host India for three-match T20I series in Delhi.
Published On :

இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான தேதிகளை ஆப்கானிஸ்தான் அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே போன்ற சிறிய கிரிக்கெட் அணிகளின் முன்னேற்றத்துக்காக அவர்களின் சொந்த மண்ணிலேயே கிரிக்கெட் தொடரை ஏற்பாடு செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. சமீபத்தில் ஜிம்பாப்வேவுக்குச் சென்று அங்கு ஹராரேயில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி தொடரைக் கைப்பற்றியது.

அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலும் விளையாட இந்தியா திட்டமிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தும் போட்டிகள் அனைத்தும் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக துபை போன்ற பொதுவான திடல்களிலேயே நடத்தப்பட்டு வருகின்றன.

இதனால், ஆப்கானிஸ்தான் - இந்தியா மோதும் போட்டிகள் இந்தியாவிலேயே நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் போட்டியை நடத்தும் நாடாகவும், இந்திய அணி வெளிநாட்டு அணியாகவும் களமிறங்குகிறது.

Story image

இவ்விரு அணிகளும் மோதும் 3 போட்டிகளுக்கான தேதிகளை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி, வருகிற செப். 13 ஆம் தேதி முதல் போட்டியும், செப். 15 இரண்டாவது போட்டியும், செப். 17 ஆம் தேதி 3-வது போட்டியும் நடைபெறுகிறது. இந்த மூன்று போட்டிகளும் தில்லியில் உள்ள அருண் ஜேட்லி கிரிக்கெட் திடலில் நடைபெறுகின்றன.

அயர்லாந்து, இங்கிலாந்துக்கு எதிரான தோல்விக்குப் பின்னர் ஜிம்பாப்வேவுக்கு எதிராக வெற்றி பெற்று மீண்டுள்ள கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் இந்திய டி20 அணிக்கு, இந்தத் தொடர் மிகவும் முக்கியமான தொடராக அமைந்திருக்கிறது.

ஆசிய தொடருக்கான தனது டி20 இந்திய அணியை ஏற்கனவே இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துவிட்டது. மேலும் ஆப்கானிஸ்தான் தொடருக்கான அணியும் பெரும்பாலும் இதேபோன்றுதான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிய தொடருக்கான இந்திய அணி

ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, திலக் வர்மா (துணை கேப்டன்), அக்‌ஷர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், வைபவ் சூர்யவன்ஷி, பும்ரா.

Summary

The Afghanistan Cricket Board (ACB) and the Board of Control for Cricket in India (BCCI) have confirmed that Afghanistan will host India in a three-match T20I series at the Arun Jaitley Cricket Stadium in Delhi from September 13 to 17, 2026.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.