உணவுப் பிரியர்களுக்கு குட் நியூஸ்! இனி சாலையோரக் கடையில் சாப்பிட பயப்பட வேண்டாம்!வங்கிக் கணக்கை கொடுங்கள்; பணம் கொடுக்கிறோம் என்று சொன்னால்... ஆர்பிஐ எச்சரிக்கைஹிமாசலில் பேருந்து கவிழ்ந்து விபத்து! 7 பேர் பலி, 11 பேர் காயம்!எஃப்சிஆர்ஏ சட்டத்தைத் திரும்பப் பெறுக: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்தவெக அரசு இன்று நடத்தும் தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக பங்கேற்காது: கனிமொழிதிமுக நிலைப்பாட்டை அறிய தவெகவுக்கு காங்கிரஸ் அழுத்தம்: அன்புமணிமுதல்வர் விஜய்க்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது: மாணிக்கம் தாகூர்பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருந்த வழக்குரைஞர் திடீர் உயிரிழப்புமேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு: இன்றைய முழு நிலவரம்! தங்கம் விலை உயர்வு: வெள்ளி விலை?
/

2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றது ஆப்கன்!

2027 ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு ஆப்கானிஸ்தான் அணி நேரடியாக தகுதி பெற்றதைப் பற்றி...

News image

பால் ஸ்ட்ர்லிங் - ரஷீத்கான்.

Updated On :8 ஆகஸ்ட் 2026, 1:34 pm IST

2027 ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு ஆப்கானிஸ்தான் அணி நேரடியாக தகுதி பெற்றது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் அடுத்தாண்டு நடைபெறவிருக்கிறது.

இந்தத் தொடரை ஆப்பிரிக்க நாடுகளான தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய நாடுகள் நடத்துகின்றன. மொத்தமாக 12 இடங்களில் நடைபெறும் போட்டிகளில் தென்னாப்பிரிக்காவில் 8 இடங்களில் நடைபெறுகின்றன.

போட்டியை நடத்தும் நாடுகளைத் தவிர்த்து இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகள் நேரடியாகத் தகுதி பெற்றிருக்கின்றன.

இந்த நிலையில், அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது.

இவ்விரு அணிகளும் மாஹெரமாசனில் மோதிய முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கு நேரடியாகத் தகுதிபெற்றிருக்கிறது.

கற்றுக்குட்டியாக இருந்து 2015 ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்குத் தகுதி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, அந்தத் தொடரில் ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று அசத்தியிருந்தது.

அதனைத் தொடர்ந்து 2019 தொடரில் ஒரு வெற்றிகூட பெறவில்லை என்றாலும், 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற தொடரில் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து என நான்கு அணிகளையும் பதம்பார்த்தது நினைவுகூரத்தக்கது.

Summary

Afghanistan have officially secured direct qualification for the 2027 ICC Men's Cricket World Cup. Their first ODI against Ireland in Bready was washed out due to rain, a result that ended Ireland's mathematical chances of overtaking Afghanistan in the rankings.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.