
டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கான நடுவர்கள் குழு அறிவிப்பு!
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டிக்கான நடுவர்கள் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

படம் | டி20 உலகக் கோப்பை (எக்ஸ்)
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டிக்கான நடுவர்கள் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அரையிறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், நேற்று (ஜூலை 2) நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
The @emirates ICC International Panel of Match Officials to officiate the Women's #T20WorldCup Final have been named ðhttps://t.co/GCyg6ZxFGa
— T20 World Cup (@T20WorldCup) July 3, 2026
இந்த நிலையில், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான இறுதிப்போட்டிக்கான நடுவர்கள் குழுவை ஐசிசி அறிவித்துள்ளது.
கள நடுவர்களாக ஜாக்லின் வில்லியம்ஸ் மற்றும் விருந்தா ரதி செயல்படவுள்ளனர். மூன்றாம் நடுவராக கிம் காட்டனும், நான்காம் நடுவராக நிமலி பெரேராவும் செயல்படவுள்ளனர். போட்டியின் நடுவராக ஜிஎஸ் லக்ஷ்மி செயல்படவுள்ளார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான இறுதிப்போட்டி நாளை மறுநாள் (ஜூலை 5) லார்ட்ஸ் திடலில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
The panel of umpires for the final of the ICC Women's T20 World Cup has been announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







