ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள அணிகளின் வீராங்கனைகள் ஐசிசி தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் முன்னேறின. ஓவலில் இன்று (ஜூன் 30) நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் விளையாடுகின்றன.
இந்த நிலையில், ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பாக செயல்பட்டு அரையிறுதிக்கு முன்னேறிய அணிகளின் வீராங்கனைகள் ஐசிசி தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளரான சோஃபி எக்கல்ஸ்டோன் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி மூன்றாமிடம் பிடித்துள்ளார். நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் அவர் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார். இங்கிலாந்து அணியின் மற்றொரு வீராங்கனையான லாரன் பெல் மூன்று இடங்கள் முன்னேறி 4-வது இடம் பிடித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளரான நான்குலுலேகோ மிலாபா ஒரு இடம் முன்னேறி ஐந்தாவது இடத்தில் உள்ளார். மாரிஸேன் காப் 7 இடங்கள் முன்னேறி14-வது இடத்தில் உள்ளார். இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளரான ஸ்ரீ சரணி பந்துவீச்சு தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறார்.
பேட்டர்கள் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணியின் ஜார்ஜியா வோல், தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வர்ட் முன்னேற்றம் கண்டுள்ளனர். இலங்கை அணியின் கேப்டன் சமாரி அத்தப்பத்தும் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியில் ஜார்ஜியா வோலைத் தவிர்த்து, எல்லிஸ் பெரியும் பேட்டர்கள் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.
ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ஹேலி மேத்யூஸ் முதலிடத்தில் நீடிக்கிறார். அடுத்தடுத்த இடங்களில் நியூசிலாந்தின் மெலி கெர், அயர்லாந்தின் ஓர்லா பிரண்டர்கேஸ்ட் உள்ளனர்.
Summary
The ICC Women's T20 World Cup semi-finalists have seen progress in the ICC rankings.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தோல்வி; இந்திய அணியின் கேப்டன் கூறுவதென்ன?

டி20 உலகக் கோப்பை: தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றிபெற்ற ஆஸி. மகளிரணி!

தொடர்ச்சியாக 2-ஆவது வெற்றி..! ஸ்காட்லாந்தை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள்!

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலிய மகளிர் பந்துவீச்சு!
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI




