கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜிநாமா!‘ஹிட்’ மூலம் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியைப் பிரதமர் அடிப்பார்! தமிழிசைதவெகவில் இணைந்த அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகள்!சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்!எம்எல்ஏக்கள் ராஜிநாமா! சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணைக்கு அதிமுக எம்பி கோரிக்கை!
/

மகளிர் டி20 உலகக் கோப்பை: நடுவர்கள் குழுவில் தமிழ்ப் பெண் உள்பட 4 இந்தியர்களுக்கு வாய்ப்பு!

மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான நடுவர்கள் குழுவில் 4 இந்திய பெண்கள் இடம்பெற்றுள்ளதைப் பற்றி...

News image

நடுவர்கள்.

Updated On :28 மே 2026, 3:45 pm IST

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான நடுவர்கள் குழுவில் 4 இந்திய பெண்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தெரிவித்துள்ளது.

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறவுள்ளது. ஜூன் 12 ஆம் தேதி தொடங்கும் இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா உள்பட 12 அணிகள் பங்கேற்கவுள்ளன.

மொத்தமாக 33 போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. உலகக் கோப்பைத் தொடரில் ஜூன் 14 ஆம் தேதி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்திய அணி.

இந்த நிலையில், மகளிர் டி20 உலகக் கோப்பையை மேற்பார்வையிடவுள்ள, 18 பேர் கொண்ட பெண் ஐசிசி நடுவர்கள் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 4 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

தொடர்ந்து மூன்றாவது முறையாக முழுக்க முழுக்கப் பெண்கள் மட்டுமே அடங்கிய நடுவர் குழுவை ஐசிசி வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் கேண்டஸ் லா போர்டே, காயத்ரி வேணுகோபாலன், கெரின் கிளாஸ்டே மற்றும் ஷதிரா ஜாகிர் ஜெசி ஆகியோர் தங்களது முதல்முறையாகப் பங்கேற்கவுள்ளனர். நடுவர்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த பிருந்தா ரதி மற்றும் ஜனனி இருவரும் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் காயத்ரி வேணுகோபாலன் சென்னையைச் சேர்ந்தவராவார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிளேர் போலோசாக், 22 போட்டிகளுக்கு நடுவராகப் பணியாற்றிய அனுபவத்துடன், இத்தொடரில் 6-வது முறையாகப் பங்கேற்கவுள்ளார்.

நடுவர்கள் குழு விவரம்

  • லாரன் ஏஜென்பேக்

  • கிம் காட்டன்

  • அன்னா ஹாரிஸ்

  • ஷதீரா ஜாகிர் ஜெஸி

  • கெரின் கிளாஸ்டெ

  • கேண்டஸ் லா போர்டே

  • ஜனனி என்

  • நிமாலி பெரேரா

  • கிளாரி போலோசாக்

  • விருந்தா ரதி

  • சுசான் ரெட்ஃபெர்ன்

  • எலோயிஸ் ஷெரிடன்

  • ஜாக்குலின் வில்லியம்ஸ்

  • காயத்ரி வேணுகோபாலன்

  • ட்ரூடி ஆண்டர்சன்,

  • ஷாண்டேர் ஃப்ரிட்ஸ்

  • ஜி.எஸ்.லட்சுமி,

  • மைக்கேல் பெரேரா

Summary

Four Indian officials, including match referee GS Lakshmi, have been named in the 18-strong all-female list of ICC match officials who will supervise the Women's T20 World Cup beginning June 12 in England and Wales.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.