மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்தி ஐசிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. 12 அணிகள் பங்கேற்கும் இந்த கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறவுள்ளது. போட்டிகள் அனைத்தும் ஜூன் 12 முதல் ஜூலை 5 இடைவெளியில் நடத்தப்படுகிறது. இறுதிப்போட்டி லார்ட்ஸ் திடலில் நடைபெறுகிறது.
கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடரில் 10 அணிகள் பங்கேற்றிருந்த நிலையில், தற்போது அணிகளின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. கடந்த முறை டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான பரிசுத் தொகை ரூ.74 கோடியாக இருந்தது.
இந்த நிலையில், மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்தி ஐசிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
கடந்த டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான பரிசுத் தொகையில் இந்த முறை 10 சதவிகிதம் உயர்த்தப்பட்டு, பரிசுத் தொகை ரூ.82 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான பரிசுத் தொகை கடந்த எடிசனைக் காட்டிலும் தற்போது 10 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு கிட்டத்தட்ட ரூ.21.8 கோடி பரிசுத் தொகையாக கிடைக்கும். இரண்டாமிடம் பிடிக்கும் அணிக்கு கிட்டத்தட்ட ரூ.10 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படும்.
அரையிறுதியில் தோல்வியடையும் அணிகளுக்கு ரூ.6.29 கோடி வழங்கப்படும். குரூப் ஸ்டேஜ் போட்டியில் அணிகள் பெறும் ஒவ்வொரு வெற்றிக்கும் ரூ.29 லட்சம் வழங்கப்படும். உலகக் கோப்பையில் பங்குபெற்று விளையாடும் 12 அணிகளுக்கும் குறைந்தது ரூ. 2.06 கோடி பரிசுத் தொகையாக கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் வருகிற ஜூன் 12 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி, இலங்கையை எதிர்த்து விளையாடுகிறது.
Summary
The ICC has announced an increase in the prize money for the Women's T20 World Cup.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

#t20wc | டி20 உலகக் கோப்பையின் சிறந்த லெவன்: உங்கள் தேர்வு என்ன? | T20 World Cup |

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup

அதிர்ஷ்டமில்லாத டேவிட் மில்லர்..! பங்கேற்ற 12 ஐசிசி கோப்பைகளிலும் தோல்வி!

2028 டி20 உலகக் கோப்பைக்குத் தேர்வான 12 அணிகள்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


