இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் ஃபார்முக்குத் திரும்புவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அயர்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடர் நிறைவடைந்ததையடுத்து, இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டிக்கு மழை காரணமாக முடிவு கிடைக்கவில்லை. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி மான்செஸ்டரில் நாளை (ஜூலை 4) நடைபெறுகிறது.
சஞ்சு சாம்சன் ஃபார்முக்குத் திரும்புவாரா?
டி20 உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல சஞ்சு சாம்சன் மிக முக்கிய காரணமாக அமைந்தார். அதன் பின், ஐபிஎல் தொடரிலும் அவர் நன்றாக விளையாடினார். இருப்பினும், அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் அவர் விளையாடிய விதமும், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடிய விதமும் அவர் அழுத்தத்தில் இருக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
ஐபிஎல் தொடரில் அதிரடியில் மிரட்டிய வைபவ் சூர்யவன்ஷி அனைவரும் எதிர்பார்த்தது போன்றே, அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். இருப்பினும், அவர் பிளேயிங் லெவனில் களமிறக்கப்படவில்லை. அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரின் இரண்டு போட்டிகளில் சஞ்சு சாம்சன் 5 ரன்கள் மற்றும் 0 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அவர் ஒரு ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஒருபுறம் அணியில் அறிமுகமாக வைபவ் சூர்யவன்ஷி காத்திருக்க, மற்றொருபுறம் தொடர்ச்சியாக மூன்று ஆட்டங்களில் சஞ்சு சாம்சன் சரியாக விளையாடவில்லை. வைபவ் சூர்யவன்ஷியை பிளேயிங் லெவனில் களமிறக்க வேண்டும் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இந்தியா - இங்கிலாந்து இடையே மான்செஸ்டரில் நாளை நடைபெறும் இரண்டாவது டி20 போட்டியில் ஃபார்முக்குத் திரும்ப வேண்டும் என்ற நெருக்கடியில் சஞ்சு சாம்சன் உள்ளார். அணியில் சூர்யவன்ஷி இருப்பதால் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடாத பட்சத்தில், அவருக்குப் பதிலாக சூர்யவன்ஷி களமிறக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது.
இரண்டாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் தனது பழைய ஃபார்முக்குத் திரும்புவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Summary
Regarding whether Sanju Samson is under pressure to return to form in the second T20 match against England...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
முதல் டி20 போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி பிளேயிங் லெவனில் இடம்பெறுவாரா?
இரண்டு போட்டிகளிலும் சூர்யவன்ஷி விளையாடியிருக்க வேண்டும்: முன்னாள் கேப்டன்

தோனி, கோலியை டென்னிஸ் வீரர்களுடன் ஒப்பிட்டு பேசிய சஞ்சு சாம்சன்!

பகை அல்ல நட்புதான்... கிளாசனுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த சஞ்சு சாம்சன்!
விடியோக்கள்
Gatta Kusthi 2 Movie Review | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Dinamani Talkies

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK




