ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷபூர் ஜத்ரான் நீண்டகால உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 38.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷபூர் ஜத்ரான் (Shapoor Zadran), உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை கடுமையாக பாதிக்கும் ‘ஹீமோஃபேகோசைடிக் லிம்ஃபோஹிஸ்டியோசிஸ்’ என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த அக்டோபர் மாதம் முதன்முதலில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் உள்ள மருத்துவர்கள் அவரை சிகிச்சைக்காக இந்தியா வருமாறு கேட்டுக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த ஏப்ரலில் தில்லி வந்த அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஷபூர் ஜத்ரானுக்கான மருத்துவ உதவிகளை ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத்கான் செய்துவந்தார்.
ஸ்டேஜ்-4 வகையில் ஷபூர் ஜத்ரான் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் உடல்நிலை தேறி வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், இன்று காலை தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது.
2009 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணிக்காக அறிமுகமான ஜத்ரான், 2020 வரை ஆப்கானிஸ்தான் அணிக்காக 80 சர்வதேசப் போட்டிகளில் (44 ஒருநாள், 36 டி20) விளையாடியுள்ளார்.
2015 ஆம் ஆண்டு ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பையில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றதில், ஷபூர் பெரும் பங்காற்றியிருந்தார். மேலும், இவர் கடந்த 2025 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாகவும் அறிவித்தார்.
ஷபூர் ஜத்ரானின் மறைவுக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், சக கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Summary
Former Afghanistan fast bowler Shapoor Zadran died at 38 in New Delhi following a prolonged battle with a rare immune disorder, leaving the global cricketing fraternity mourning one of the pioneers of Afghanistan cricket.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







