அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

மூவர் அரைசதம்: இந்தியா ஏ 319 ரன்கள் குவிப்பு!

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா ஏ அணியின் பேட்டிங் குறித்து...

News image

வைபவ் சூர்யவன்ஷி, பிரியான்ஸ் ஆர்யா. - படம்: பிசிசிஐ

Updated On :17 ஜூன் 2026, 2:47 pm IST

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா ஏ அணி 50 ஓவர்களில் 319-9 ரன்கள் குவித்துள்ளது. இதில் திலக் வர்மா, பிரியான்ஸ் ஆர்யா, குமார் குஷாக்ரா அரைசதம் அடித்து அசத்தினார்கள்.

ஆப்கானிஸ்தான் ஏ சார்பாக தாவூத்ஜாய், அப்துல்லா, சஃபி தலா 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள்.

இலங்கையில் நடைபெற்றுவரும் முத்தரப்பு ஏ அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் மோதின. இதில் டாஸ் வென்ற ஆப்கன் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

பிரியான்ஷ் ஆர்யா அரைசதம் அடித்து ஆட்டமிழக்க, வைபவ் சூர்யவன்ஷி 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ருதுராஜ் 30 ரன்களுக்கும் திலக் வர்மா 59, குமார் குஷாக்ரா 58 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள்.

இறுதியில் நிஷாந்த் சிந்து 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 50 ஓவர்களில் இந்தியா ஏ அணி 319 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியில் வென்றால் மட்டுமே இந்தியா ஏ இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

India A score 319 rins against afghanistan A in Tri Nation A Series

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.