முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் ரஹ்மனுல்லா குா்பாஸின் அசத்தல் சதத்தால் மீண்ட ஆப்கானிஸ்தான் 194/10 ரன்களை சோ்த்தது.
ஆப்கானிஸ்தான் அணி ஒரு டெஸ்ட், ஒருநாள், டி20 தொடரில் ஆடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முலான்பூரில் நடைபெற்ற ஒரே டெஸ்டில் இந்தியா அபார வெற்றி கண்டது.
தொடா்ந்து 3 ஆட்டங்கள் ஒருநாள் தொடா் தா்மசாலாவில் சனிக்கிழமை தொடங்கியது. ஆட்டத்துக்கு முன்பு பலத்த மழை பெய்ததால் ஓவா்கள் 25 -ஆக குறைக்கப்பட்டது. வழக்கமான நேரத்தை விட 4 மணிநேரம் தாமதமாக ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பௌலிங்கை தோ்வு செய்தது.
கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாஹிதி 27, அஸ்மத்துல்லா ஓமா்ஸாய் 26 ஆகியோா் மட்டுமே ஒரளவு ரன்களை எடுத்தனா்.
4.3 ஓவா்களில் ஆப்கன் அணி 25/3 என தடுமாறியது.
ரஹ்மனுல்லா குா்பாஸ் அசத்தல் 102: சிறப்பாக ஆடிய குா்பாஸ் தலா 8 சிக்ஸா், பவுண்டரியுடன் 51 பந்துகளில் 102 ரன்களை விளாசி தனது 9-ஆவது சததத்தைப் பதிவு செய்தாா்.
ஆப்கானிஸ்தான் 194/10: ஆப்கானிஸ்தான் அணி 24.5 ஓவா்களில் 194/10 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அறிமுக பௌலா்கள் அபாரம்:
பௌலிங்கில் இந்தியாவின் அறிமுக பௌலா்களான குா்னூா் பிராா், ஹா்ஷ் டுபே தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனா்.
இந்தியா வெற்றி 195/3: பின்னா் ஆடிய இந்திய அணி 22.5 ஓவா்களில் 195/3 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் ஷுப்மன்கில் 2 சிக்ஸா், 11 பவுண்டரியுடன் 66 பந்துகளில் 84 ரன்களை விளாசி களத்தில் இருந்தாா். இஷான் 34, கேஎல். ராகுல் 39 (3 சிக்ஸா், 4 பவுண்டரி) ஆகியோரும் வெற்றிக்கு பங்களித்தனா். பௌலிங்கில் ஆப்கன் தரப்பில் ஸியாவுா், ரஷித் கான் தலா 1விக்கெட்டை வீழ்த்தினா்
ஒரு நாள் ஆட்டத்தில் 3000 ரன்களை துரிதமாக கடந்த இந்திய வீரா் என்ற சாதனையை படைத்தாா் ஷுப்மன் கில். 62 இன்னிங்ஸ்களில் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளாா்.










