பொன்னேரி, டிச. 7: மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள கிளிக்கோடி கிராமத்தில் உள்ள காலனியில் வசிக்கும் மக்கள் கழிப்பிடம், சாலை, சுடுகாடு மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதுமின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகா, மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள கடைக்கோடி பகுதியாக விளங்கும் கிளிக்கோடி கிராமத்தில் உள்ள காலனியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் 600-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அரசு கட்டிக் கொடுத்த தொகுப்பு வீடுகள் மற்றும் ஓடு, ஓலை வேய்ந்த வீடுகளில் ஏழ்மை நிலையில் இங்கு வசிக்கும் மக்களுக்கு தேவையான சாலை, கழிப்பிடம், தெரு விளக்கு சுடுகாடு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதுமின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
இங்கு 2003-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு உறுப்பினர் நிதியின்கீழ் கட்டப்பட்டுள்ள கழிப்பிடம் திறக்கப்படாமல் மூடியே கிடக்கின்றது. பொதுக் கழிப்பிடம் இல்லாததன் காரணமாக இப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளின் அருகிலேயே காலை கடன்களை கழிக்கும் நிலை உள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அடிக்கடி தொற்று நோய்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலை உள்ளது.
மேலும் இங்குள்ள சுடுகாட்டுக்கு இதுவரை மேற்கூரை அமைக்கப்படாததன் காரணமாக மழை நேரங்களில் உயிரிழப்பவர்களை எரியூட்ட முடியாமல் மழை நிற்கும் வரை பிணத்துடன் காத்திருக்கும் அவல நிலை உள்ளது. அத்துடன் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகள் எரியாமல் காட்சி பொருளாய் இருக்கிறது. மேலும் முறையான சாலை, மின்விளக்கு வசதி இன்றி இப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கழிப்பிடம், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றித் தர திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் வேண்டுகோளாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேட்டுப்பாளையம்: தாயைப் பிரிந்து சுற்றித்திரியும் குட்டியானை ஆற்றில் உற்சாக குளியல்!

எப்பவும் தனி வழிதான்: தனுஷ்

வாக்களித்தார் மத்திய அமைச்சர் அமித் ஷா!

பாஜகவுக்கு தாவிய ஹர்பஜன் சிங்! வீட்டுச் சுவரில் துரோகி வாசகம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


