ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

தமிழகத்தில் கனமழை எதிரொலி: 26 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு

சென்னை, டிச. 10: தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்துள்ளதையடுத்து, சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நவம்பர் முதல் வாரத்தி

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 9:20 am

ச. குமரன்

சென்னை, டிச. 10: தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்துள்ளதையடுத்து, சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நவம்பர் முதல் வாரத்தில் தான் தீவிரம் அடைந்தது. இதுவரை 26 மாவட்டங்களில் இயல்பான அளவை விட கூடுதலாக அடைமழை கொட்டித் தீர்த்தது. இதில் சென்னை முதல் கன்னியாகுமரி உள்ளிட்ட 13 கடலோர மாவட்டங்களிலும் புதன்கிழமை வரை தென்மேற்கு, வடகிழக்கு ஆகிய இரு பருவ மழை காலத்திலும் அதிக அளவு மழை பொழிந்துள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக நிலத்தடி நீர்மட்டம் குறித்து பொதுப்பணித்துறை நிலத்தடி நீர்மட்ட ஆய்வகம் மாதந்தோறும் விவரங்களை சேகரித்து வருகின்றது. இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் 1,774 திறந்தவெளிக் கிணறுகளை அமைத்துள்ளது. இதில் 81 கிணறுகளில் அதிநவீன தானியங்கி சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இதுதவிர சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக 38 இடங்களில்

திறந்தவெளிக் கிணறுகளை அமைக்க அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

பொதுவாக இந்த திறந்த வெளி கிணறுகளில் நிலத்தின் மேல் அடுக்கில் இருந்து,திறந்த வெளிக் கிணற்றில் உள்ள நீரின் மட்டத்தை அளந்து கணக்கிடப்படுகிறது. இது, மாவட்டங்களைப் பொறுத்து மாறுபடும்.

செயற்கைக்கோள்களின் உதவியுடன் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து தரமணியில் உள்ள பொதுப்பணித்துறையின் தொலையுணர்வு ஆய்வு மையம் மாவட்ட வாரியாக சேகரித்துள்ள நிலத்தடி நீர்மட்ட விவரம் (மீட்டரில்):

சென்னை 4.28, திருவள்ளூர் 4.3, காஞ்சிபுரம் 3.8, கடலூர் 6.18, நாகப்பட்டினம் 1, திருவாரூர் 7,தஞ்சாவூர் 14, புதுக்கோட்டை 5.27, நாமக்கல் 10.3, சேலம் 9.5, திருச்சி 10.86, ஈரோடு 11.65, வேலூர் 7.68, திருவண்ணாமலை 6.9, விழுப்புரம் 6.08, தருமபுரி 8.9, கிருஷ்ணகிரி 6.81, திண்டுக்கல் 11.41, மதுரை 6, சிவகங்கை 3.85, ராமநாதபுரம் 4.18, தூத்துக்குடி 5.76, நெல்லை 8.01, கன்னியாகுமரி 5.72, தேனி 10.08,  நீலகிரி 1.89.

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வீழ்ச்சி: எனினும், கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த ஆண்டு போதிய மழைப் பொழிவு இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் மைனஸ் அளவாகக் குறைந்துள்ளது. இதன் விவரம் (மைனஸ் மீட்டரில்) கோவை -1, திருப்பூர் -1, சேலம் -1.26, பெரம்பூர் 0.37, கரூர் 0.33, விருதுநகர் 1.11.

எனினும், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், இந்த ஆண்டு கோடை காலத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு பிரச்சினை ஏற்படாது என்று பொதுப்பணித்துறையின் நிலத்தடி நீர்வள நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறித்து இஸ்ரோவுடன் இணைந்து, பொதுப்பணித் துறை நீர்வள நிபுணர்கள் குழு செய்ய செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஜிபிஎஸ் சாதனங்களைக் கொண்டு இந்த நிபுணர்கள் குழு, தமிழகத்தின் நிலத்தடி நீர் வளம், பாசன வசதி, பயிர் சாகுபடி பரப்பு உள்ளிட்ட பல்வேறு விவரங்களுடன் கூடிய வரைபடம் (இ-மேப்) தயாரித்து வருகின்றனர்.

இதன்படி நிலத்தடி நீர்மட்டத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களைக் கண்டறிந்து சட்ட ரீதியாக பல்வேறு கடும் நடவடிக்கைகளை   எடுக்கவும் இப்போது அரசு திட்டமிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.