சென்னை, ஜூலை 17: சென்னையில் பல வழித் தடங்களில் சாதாரண கட்டண மாநகர பஸ்கள் இயக்கப்படுவதே இல்லை என புகார்கள் எழுந்துள்ளன.
இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர் என்று புகார் கூறப்படுவதோடு, மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு வருவாய் இழப்பும் ஏற்படுவதாக துறை ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மாநகர போக்குவரத்துக் கழகத்தில் மொத்தம் 3,464 பஸ்கள் உள்ளன. இவற்றில் தினமும் 3,185 பஸ்கள் பல்வேறு வழித் தடங்களில் இயக்கப்படுகின்றன. மீதமுள்ள பஸ்கள் ரிசர்வ் பஸ்களாக நிறுத்தி வைக்கப்படுகின்றன.
கடந்த திமுக ஆட்சியின்போது, மாநகர பஸ்களில் மிகக் குறைந்த அளவிலேயே சாதாரண கட்டண பஸ்கள் இயக்கப்பட்டதாகத் தொடர் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.
அப்போது சாதாரண கட்டண பஸ்கள் மட்டுமின்றி -எம்- சர்வீஸ் பஸ், எல்.எஸ்.எஸ்., விரைவு பஸ் (மஞ்சள் நிற போர்டு), டீலக்ஸ் எனப் பல்வேறு பெயர்களில் கூடுதல் கட்டண பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் காலையில் சாதாரண கட்டண பஸ்ஸôக இயக்கப்படுபவை பிற்பகலில் -எம்- சர்வீஸ் பஸ்களாக மாற்றப்படுவதாகவும் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற அதிமுக அரசு, பொதுமக்களின் இந்தப் பாதிப்பை களையும் வகையில், பல்வேறு பெயர்களில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நடைமுறையை ரத்து செய்தது. மேலும் சாதாரண பஸ்கள், விரைவு பஸ்கள் மற்றும் டீலக்ஸ் என்ற மூன்று சேவைகளை மட்டுமே அமல்படுத்தியது.
இதன் காரணமாக மிகக் குறைந்த அளவில் இயக்கப்பட்டு வந்த சாதாரண பஸ்களின் எண்ணிக்கை இப்போது 1,403-ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் விரைவு பஸ்கள் 671, டீலக்ஸ் பஸ்கள் 1,111 என்ற அளவில் இப்போது இயக்கப்படுகின்றன. இந்த மாற்றம் பொதுமக்களிடையேயும், ஏழை பயணிகளிடையேயும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வருமானம் பாதிப்பு: இதுபோன்று பல பகுதிகளில் சாதாரண கட்டண பஸ்கள் இயக்கப்படாததால், மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு வருமானம் பாதிக்கப்படுவதாகப் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஏனெனில், சாதாரண பஸ்களிலேயே அதிகப் பயணிகள் பயணிக்கின்றனர். நாள் ஒன்றுக்கு (16 மணி நேரம்) ஒரு பஸ் 8 நடை இயக்கப்படும். இதில் குறைந்தபட்சக் கட்டணம் ரூ. 3-ஆக உள்ள சாதாரண கட்டண பஸ்களில் 800 - 1,500 பயணிகள் பயணிக்கின்றனர். குறைந்தபட்சக் கட்டணம் ரூ. 5 என்ற அளவில் உள்ள டீலக்ஸ் பஸ்களில் 200 - 500 பயணிகள் மட்டுமே பயணிக்கின்றனர்.
எனவே, வருமானம் மற்றும் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு சாதாரண பஸ்கள் மற்றும் விரைவு பஸ்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்த வேண்டும் என்று போக்குவரத்துக்கழக ஊழியர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து மாநகர போக்குவரத்துக்கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியது: பிராட்வே - தாம்பரம் (21ஜி) என்பன உள்ளிட்ட சில நீண்ட தூர வழித் தடங்களுக்கு சாதாரண பஸ்கள் இயக்கப்படுவதில்லை. அவ்வாறு நீண்ட தூரங்களுக்கு சாதாரண கட்டண பஸ்களை இயக்கினால், வருவாய் இழப்பு ஏற்படும்.
அதே நேரம் பிராட்வே - தாம்பரம் வரை சாதாரண பஸ் இயக்குவதற்குப் பதிலாக, பிராட்வே - கிண்டி வரை சாதாரண பஸ் இயக்கப்படுகிறது. மீண்டும் கிண்டி - தாம்பரம் சாதாரண பஸ் இயக்கப்படுகிறது.
இதுபோன்ற கட் - சர்வீஸ்கள் மூலம் பிற நீண்ட தூர வழித் தடங்களிலும் சாதாரண பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதைத் தவிர்த்து தொடர்ச்சியாக நீண்ட தூரங்களுக்கு சாதாரண பஸ்கள் இயக்குவதை அரசுதான் முடிவு செய்யவேண்டும் என்றார்.
ஷேர் ஆட்டோக்களுக்கு வருமானம்
41டி (ஆவடி - மந்தைவெளி), டி70 (அம்பத்தூர் தொழிற்பேட்டை - வேளச்சேரி), 21ஜி (பிராட்வே - தாம்பரம்) 147சி (அம்பத்தூர் ஒ.டி. } தியாகராயர் நகர்) என்பன உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் சாதாரண பஸ்கள் இயக்கப்படுவதில்லை.
இது குறித்து திருநின்றவூரைச் சேர்ந்த பயணி ஒருவர் கூறியது: திருநின்றவூர்- பிராட்வே இடையே இயக்கப்படும் 71இ வழித்தடத்தில் சாதாரண கட்டண சேவை ரத்து செய்யப்பட்டு பல நாள்களாகிறது. சாதாரண கட்டண சேவை ரத்து செய்யப்பட்டதால் ஷேர் ஆட்டோக்களுக்கு நல்ல வருமானம்.
டீலக்ஸ் பஸ் கட்டணமும் ஷேர் ஆட்டோ கட்டணமும் சமமாக இருப்பதால் பஸ்ஸýக்காக யாரும் காத்திருப்பதில்லை. ஒரு பஸ்ஸýக்கும் மற்றொரு பஸ்ஸýக்கும் இடைப்பட்ட நேரத்தில் 4 ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருமானத்தைத் தட்டிப்பறித்துவிடுகின்றனர் என்றார்.
முன்னர் இந்த வழித் தடங்களில் சாதாரண கட்டண பஸ்கள் இயக்கப்பட்டன. இப்போது நிறுத்தப்பட்டுள்ளன. எனவே, அனைத்து வழித் தடங்களிலும் சாதாரண பஸ்கள் இயக்கப்படுவதை மாநகரப் போக்குவரத்துக் கழகம் உறுதி செய்யவேண்டும் என்கின்றனர் பயணிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

30 மி.மீ. ஆளில்லா பீரங்கிகள்: டிஆா்டிஓ தயாரிப்பு

இன்றைய ராசி பலன்கள் (26 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு நன்மை!

மேஷ ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
பச்சைப் பட்டாணி மசாலா ஃப்ரை
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


