நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

செம்பாக்கத்தில் அரசுப் பள்ளி தொடங்கப்படுமா?

தாம்பரம், மே 28: தாம்பரத்தை அடுத்த செம்பாக்கம் பேரூராட்சியில் அரசு தொடக்கப் பள்ளியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் அனைத்து பேரூராட்சிகளிலும்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:31 am

மனோ பாரதி

தாம்பரம், மே 28: தாம்பரத்தை அடுத்த செம்பாக்கம் பேரூராட்சியில் அரசு தொடக்கப் பள்ளியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் அனைத்து பேரூராட்சிகளிலும் தொடக்கப் பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டுவருவதாகக் கூறி, அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மூலம் மத்திய அரசின் விருதை தமிழக கல்வித் துறை அதிகாரிகள் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், தங்கள் பகுதியில் தொடக்கப் பள்ளி வசதியில்லை எனக் கூறி செம்பாக்கம் பேரூராட்சியில் அண்மையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் கல்வி ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே சுமார் 44 ஆயிரம் மக்கள்தொகை கொண்ட, அதிக பிளாக்குகள் (116 பிளாக்குகள்) உள்ள செம்பாக்கம் பேரூராட்சியில் இதுவரை அரசு தொடக்கப் பள்ளி தொடங்கப்படவில்லை. இங்குள்ளவர்களில் 30 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் ஏழைகள். செம்பாக்கம் பேரூராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி அமைக்க நில அளவை எண் 20-ல் சுமார் 53 சென்ட் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

இதுபற்றி செம்பாக்கம் 7-வது வார்டு உறுப்பினர் ஜி.சத்யநாராயணன் கூறியது:÷கடந்த 30 ஆண்டுகளாக செம்பாக்கத்தில் அரசு தொடக்கப் பள்ளி தொடங்க பலர் முயற்சி மேற்கொண்டும், இன்றுவரை தொடங்கப்படவில்லை. இதனால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் வேறுவழியில்லாமல், செம்பாக்கத்தைச் சுற்றி 3 கி.மீ தொலைவில் உள்ள தாம்பரம், மாடம்பாக்கம், சிட்லப்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு தங்கள் குழந்தைகளை அனுப்பிவைக்கும் நிலை உள்ளது.

செம்பாக்கத்தில் அரசு உதவிபெறும் பள்ளியொன்று இருப்பதைக் காரணம் காட்டி, எங்களது கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது.

அண்மையில் பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பதைச் சுட்டிக்காட்டி இப்பகுதியைச் சேரந்த பொதுமக்கள், தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரும், அமைச்சருமான டி.கே.எம்.சின்னையாவிடம். கோரிக்கை விடுத்துள்ளனர். அவரும் நிறைவேற்றித் தருவதாகக் கூறியுள்ளார் என்றார்.

இதுபற்றி பள்ளி தொடக்கக் கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் கூறியது:÷செம்பாக்கத்தில் தொடக்கப் பள்ளி தொடங்குவது குறித்து இதுவரையில் கோப்பு எதுவும் பார்வைக்கு வரவில்லை. புதிய தொடக்கப் பள்ளிகளைத் தொடங்குவது தொடர்பாக மத்திய அரசின் முடிவில் விரைவில் மாற்றம் வரும். அவ்வாறு வந்தால், புதிய பள்ளிகளைத் தொடங்க வாய்ப்புள்ளது என்றார்.

செம்பாக்கம் பேரூராட்சித் தலைவர் எம்.சாந்தகுமாரிடம் கேட்டபோது, ""செம்பாக்கம் பேரூராட்சியில் அரசு தொடக்கப் பள்ளி தொடங்குவது அவசியம் என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு செம்பாக்கத்தில் அரசு தொடக்கப் பள்ளி தொடங்கப்படும் என நம்புகிறோம்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.