சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் கூடுதல் மேம்பாடுகள் செய்வதற்கான ஆய்வறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை மெட்ரோ ரயில் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சென்னையில் ரூ.14,600 கோடி செலவில், மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டு 45.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு 2 வழித்தடங்களில் ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
உயர்மட்டப் பாதையில் 14 நிலையங்களும், சுரங்கப் பாதையில் 20 நிலையங்களும் அமைகிறது.
இந்தப் பணிகளை மேற்கொண்டு வரும் தனியார் கட்டுமான நிறுவனம், கடந்த ஓராண்டாக வழித் தடங்களில் என்னென்ன கூடுதல் மேம்பாடுகளைச் செய்வது என்பது தொடர்பான ஆய்வையும் மேற்கொண்டு வந்தது.
வர்த்தக மையங்கள்: மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாத வகையில் வர்த்தக மையங்களை அமைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதசாரிகள் மெட்ரோ ரயில் நிலையங்களை எளிதில் கடப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கான ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, பஸ் போக்குவரத்து, பறக்கும் ரயில், மின்சார ரயில் ஆகியவற்றுடன் மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டங்களுக்கான சாத்தியக் கூறுகள் குறித்து மேற்கொள்ளப்பட்டு வந்த ஆய்வு முடிந்துள்ள நிலையில், அந்த அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன், இந்தக் கூடுதல் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்பட்டு விடும் என உயர் அதிகாரி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
புதுவை தேர்தல்! மாநில அந்தஸ்து, கர்ப்பிணிகளுக்கு ரூ. 25,000, 100% பயிர்க் காப்பீடு: தவெக வாக்குறுதிகள்!
அயோத்தியில் 200 ஆண்டுகள் பழமையான தேவநாகரி கையெழுத்துப் பிரதி கண்டெடுப்பு!

கழிவுநீர் தொட்டியில் விழுந்த 2 ஊழியர்கள் பலி: 8 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு உடல்கள் மீட்பு

டாப் 3ல் 2 இடங்களைப் பிடித்து சாதனை படைத்த சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


