விஜய் பிரதமராவது தவெகவினர் ஆசை; சீரியஸாக எடுக்க வேண்டாம்! பெ. சண்முகம்மேட்டூர் அணை வரலாற்றில் செப்டம்பர் மாதத்தில் திறக்கப்படுவது இதுவே 4வது முறை!இனி நியாய விலைக் கடைகளில் ரூ.35-க்கு வெங்காயம் விற்பனை! ஆனால்?நேபாள வெள்ளம்! பலி 1,000-ஐ கடந்தது! 3,900 பேரை தேடும் பணி தீவிரம்! மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவைத்தார் முதல்வர் விஜய்!ரஷியா, சீன அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்புபுகைப்படம் எடுக்கும் வசதி இல்லாத கைப்பேசிக்கு தடையில்லை: அமைச்சர்சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வுதமிழ்நாட்டில் சுங்கச் சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு!

டாப் 3ல் 2 இடங்களைப் பிடித்து சாதனை படைத்த சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே!

சிஎஸ்கேவின் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே நிகழ்த்திய சாதனை குறித்து...

Ayush Mhatre

ஆயுஷ் மாத்ரே. - படம்: சிஎஸ்கே

Published On :4 ஏப்ரல் 2026, 12:35 pm IST

சிஎஸ்கேவின் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே இளம் வயதில் சிஎஸ்கே கோட்டையில் அரைசதம் அடித்த சிஎஸ்கே வீராக சாதனை படைத்துள்ளார்.

இந்த சாதனையுடன் 19 வயதுக்குள்ளாக தனிப்பட்ட நபர்களில் அதிகபட்ச ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஆயுஷ் மாத்ரே டாப் 3ல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளார்.

சேப்பாக்கத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்து 209/5 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 18.4 ஓவர்களில் 210/5 ரன்கள் எடுத்து வென்றது.

இந்தப் போட்டியில் சிஎஸ்கேவின் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே நம்.3ல் களமிறங்கி 43 பந்துகளில் 73 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இதுவரை 19 வயதுக்குள்ளாக அதிகபட்ச ரன்கள் குவித்தவர்களில் வைபவ் சூர்யவன்ஷிக்குப் பிறகு இரண்டு இடங்களையும் ஆயுஷ் மாத்ரே பிடித்துள்ளார்.

19 வயதுக்குள்ளாக அதிக ரன்கள் குவித்த டாப் 3 வீரர்கள்

1. வைபவ் சூர்யவன்ஷி - 101 ரன்கள் (14 ஆண்டுகள், 32 நாள்கள், 2025)

2. ஆயுஷ் மாத்ரே - 94 ரன்கள் (17 ஆண்டுகள், 291 நாள்கள், 2025)

3. ஆயுஷ் மாத்ரே - 73 ரன்கள் (18 ஆண்டுகள், 221 நாள்கள், 2026)

Summary

CSK Player Ayush Mhatre Secures a Spot in the Record Books!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.