சென்னை அயனாவரத்தில் ஏற்பட்ட தகராறில் ரௌடி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டார்.
அயனாவரம் ஏகாந்திபுரத்தில் உள்ள ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் ஆடலரசு (34). இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், கொலை முயற்சி வழக்கில் ஆடலரசை சில நாள்களுக்கு முன்பு ஐ.சி.எஃப். போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
அங்கு ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த அப்பு என்பவர் திருட்டு வழக்கு தொடர்பாக அடைக்கப்பட்டிருந்தார். அங்கு அவரை பார்த்த ஆடலரசு ஆத்திரமடைந்து தாக்கியுள்ளார். பின்னர் ஆடலரசு ஜாமீனில் வெளியே வந்தார். அவரை தொடர்ந்து அப்புவும் ஜாமீனில் வந்தார்.
இந்நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு அப்பு தனது நண்பர்கள் 4 பேருடன் ஆடலரசு வீட்டுக்கு சென்றார். அப்போது, போதையில் இருந்த ஆடலரசை வீட்டுக்கு வெளியே அழைத்து அவரை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர். ஆடலரசுவின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். உடனே அப்புவும், அவரது கும்பலும் காரில் தப்பி ஓடிவிட்டனர்.
காயமடைந்த ஆடலரசுவை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் போலீஸார் அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக தனிப் படை போலீஸார் விசாரித்து வியாசர்பாடியில் பதுங்கியிருந்த அப்பு, சுரேஷ் (18), லோகு (20), ராமு (20), மணவாளன் (19) ஆகிய 5 பேரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்ஸ்டாவில் பழகி 14 வயது சிறுவனுடன் 40 வயது பெண்மணி திருமணம்! -போலீஸில் புகார்
போர்நிறுத்த ஒப்பந்தம் உடனடியாக கையெழுத்தாகாது: ஈரான்

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!
நடிகர் மம்மூட்டிக்கு கௌரவ டாக்டர் பட்டம்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


