கோயம்பேடு பணிமனையில் உள்ள சோதனை தண்டவாளத்தில் மெட்ரோ ரயில் நிறுத்தப்பட்டு தொழில்நுட்ப வல்லுனர்களால் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் ஆகஸ்ட் மாதம் இறுதியில் நடைபெறும் என கூறப்பட்டது. பின்பு, இம்மாத முதல் வாரத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் சோதனை ஓட்டம் தொடங்குவது தொடர்ந்து தாமதமாகி வந்தது.
இந்த நிலையில் கோயம்பேடு பணிமனையில் உள்ள தண்டவாளத்தில் மெட்ரோ ரயில் கடந்த சில நாள்களுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டது. அங்கு தொழில்நுட்ப வல்லுனர்கள் மெட்ரோ ரயிலின் பாகங்கள், மின் இணைப்புகள் ஆகியவற்றின் தரத்தை சோதனை செய்து வருகின்றனர்.
மேலும் தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயிலின் ஸ்திரத்தன்மை மற்றும் செயல்பாடுகள் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வுகள் அனைத்தும் திருப்தியளிக்கும்பட்சத்தில் மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் அக்டோபர் முதல் வாரத்தில் மேற்கொள்ளப்படும் என மெட்ரோ ரயில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மெட்ரோ ரயிலுக்காக பிரேசில் நாட்டில் இருந்து 4 பெட்டிகள் கொண்ட முதல் ரயில் சென்னை வந்து 3 மாதங்களாகின்றன. இந்த ரயில் சோதனை ஓட்டத்துக்காக தயார் நிலையில் உள்ளது. கோயம்பேடு பணிமனையில் 800 மீட்டர் தூரத்துக்கு சோதனை தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது.
ரயில் ஒவ்வொரு கட்டமாக இயக்கப்பட்டு, பின்பு முழு வேகத்தில் இயக்கி பார்க்கப்படும். மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் 6 மாத காலம் வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது.
சோதனையின்போது ரயிலின் ஒவ்வொரு அசைவையும் ரயில்வே அமைச்சகத்தின் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அதிகாரிகள் சோதனை செய்வர்.
சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மெட்ரோ ரயில் திட்டம் கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்தத் திட்டத்துக்கு ரூ.14 ஆயிரத்து 600 கோடி ஒதுக்கப்பட்டு, 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுகிறது.
சுரங்கப் பாதையாகவும், மேம்பால வழித்தடமாகவும் மெட்ரோ ரயில் போக்குவரத்து அமைகிறது. சென்னை மெட்ரோ ரயிலுக்காக 32 ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக மெட்ரோ ரயிலின் அனைத்துப் பணிகளும் 2015-ஆம் ஆண்டுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


