ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மீனவர்கள் கைது விவகாரத்தில் இலங்கையை கடுமையாக எச்சரிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய அரசு,

News image
Updated On :9 ஜூன் 2014, 10:53 am

வேல்முருகன்

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய அரசு, இலங்கையை கடுமையாக எச்சரிக்க வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, எந்த தவறும் செய்யாத தமிழகமீனவர்கள் 82 பேரை ஒரே இரவில் சிங்களக் கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றிருக்கின்றனர். சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல்களை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்கொண்டு களைத்து விட்ட தமிழக மீனவர்கள் தற்போது நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசைத் தான் மலைபோல நம்பியிருக்கிறார்கள்.

இலங்கை அரசைக் கடுமையாக எச்சரிப்பதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் மட்டுமே முடியும் என்பது தமிழகத்தின் நம்பிக்கை ஆகும்.

எனவே, சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 82 மீனவர்களையும் அவர்களின்படகுகளுடன் உடனடியாக விடுவிக்கும்படி இலங்கை அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும். அதுமட்டுமின்றி, மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் நடவடிக்கை வேண்டும். என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.