ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

குடியரசுத்தலைவர் அறிக்கை பா.ஜ.க.வின் வார்த்தை வாய்ஜாலம் : ஞானதேசிகன் குற்றச்சாட்டு

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திரு. பி.எஸ். ஞானதேசிகன் குடியரசுத்தலைவர் அறிக்கை பா.ஜ.க.வின் வார்த்தை வாய்ஜாலம் என்று குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர்

News image
Updated On :10 ஜூன் 2014, 11:23 am

வேல்முருகன்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திரு. பி.எஸ். ஞானதேசிகன் குடியரசுத்தலைவர் அறிக்கை பா.ஜ.க.வின் வார்த்தை வாய்ஜாலம் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நேற்றைய குடியரசுத் தலைவர் உரையில் நடைமுறை சாத்தியமற்ற கவர்ச்சி காதிக அறிக்கையாகும்.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலங்களில் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்கிய பா.ஜ.க.வினர் 2014-ம் ஆண்டில் கூச்சல், குழப்பம் இல்லாத, மக்களுக்காக செயல்படும் பாராளுமன்றம் உருவாக்கப்படும் என்று கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது.

தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளான இலங்கை தமிழர் பிரச்சனை, இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினை, காவிரி நதிநீர் பங்கீடு, முல்லை பெரியாறு அணை, சேதுசமுத்திர திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் வராதது ஏமாற்றம் அளிக்கிறது. இவைகள் எல்லாம் இடம்பெறாத ஜனாதிபதி உரையை தமிழக அரசியல் கட்சிகள் சில அ.இ.அ.தி.மு.க.உட்பட பாராட்டுவது விந்தையாக உள்ளது.

மகாத்மா காந்தியடிகள், இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்றார். கிராம முன்னேற்றம் நாட்டின்வளர்ச்சி என்றார். ஆனால் குடியரசுத் தலைவர் உரையில் புதிய 100 நகரங்களை உருவாக்கப்படும் என்று அறிவித்திருப்பது கிராம முன்னேற்றத்திற்கு தடை வகுக்கும், நகரமயமாக்கலை ஊக்குவிக்கும்.

வைர நாற்கர ரயில் திட்டம் போன்ற திட்டங்கள் வரவேற்கத்தக்கது என்றாலும், புதிய நகரம், புதியஐ.டி.ஐ., ஐ.ஐ.எம்,; அனைத்து; மாநிலங்களிலும் எய்மஸ் துவஙக்பப்டும்,; டிஜிட்டல் இந்தியா, இளைஞர் மேம்பாட்டு திட்டம் போன்றவை ஏற்கனவே காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளாக உருவாக்கியவை தான்.

குடும்பத்திறகு ஒரு வீடு என்ற  திட்டம் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையின் நகலாகும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வெளிநாட்டு முதலீடுகளை குறை கூறியவர்கள் வெளிநாட்டு முதலீடு மூலம் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கப்படும் என்று அறிவித்திருப்பது விந்தையாக உள்ளது.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி காலத்தில் ஊழலை ஒழிக்கும் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற விடாமல் தடுத்ததோடு மட்டுமல்லாமல்,  லோக் ஆயுக்தா நீதிபதியை கடைசி வரை நோகடித்த பா.ஜ.க.வினர். இப்போது; லோக்பால் அமைப்பு வலுப்படுத்தப்படும் என்று கூறிருப்பது நகைப்பிற்குரியதாகும். 2012-க்குள் அனைவருக்கும் வீடு என்பது 2019ல் முடியும் 5 ஆண்டு கால வரம்பை தாண்டி செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருப்பது வேடிக்கையாக உள்ளது. போகாத ஊருக்கு வழிகாட்டுவதாக உள்ளது.

புதிய வேலை வாய்ப்பு திட்டம், புதிய தொழில் துவங்கும் திட்டம், புதிய தொழிற்சாலை ஊக்குவிப்பு திட்டம் ஏதுமில்லை. நிதி ஆதாரங்களை பெருக்குவதற்கான திட்டம் ஏதுமில்லாமல், புதிய அறிவிப்புகளை அறிவித்திரூப்பது புதிய அரசின் கவர்ச்சி வார்த்தை, வாய்ஜாலமாக உள்ளது.

நாட்டின் பாராளுமன்றத்தையே பாதுகாக்க தவறியவர்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதாக அறிவித்திருப்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும். சுருக்கமாக சொன்னால் பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சாரம் இன்னும் முடியவில்லை என்கிற உணர்வுதான் ஏற்படுகிறது.

மொத்தத்தில் குடியரசுத் தலைவர் உரை என்பது பா.ஜ.க.வின் வார்த்தை வாய்ஜாலம் ஆகும். இவ்வாறு ஞானதேசிகன் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.