47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காங்கிரசை பூஜ்யம் என்று ஒதுக்கிய திமுக பூஜ்யம் ஆகிவிட்டது: இ.வி.கே.எஸ். இளங்கோவன்

காங்கிரஸ் துணை தலைவ ராகுல் காந்தியின் 44–வது பிறந்தநாள் விழா சென்னை சத்திய மூர்த்தி பவனில் இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் 500 ஏழை பெண்களுக்கு இலவச சேலைகளும்,

News image
Updated On :19 ஜூன் 2014, 9:43 am

வேல்முருகன்

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியின் 44–வது பிறந்தநாள் விழா சென்னை சத்திய மூர்த்தி பவனில் இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் 500 ஏழை பெண்களுக்கு இலவச சேலைகளும், ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர சைக்கிள்களும் வழங்கப்பட்டன. தொண்டர்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன.

விழாவில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், காங்கிரஸை புறக்கணித்ததால் திமுக பூஜியம் ஆகிவிட்டது என்று கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது:

தேர்தலில் தோற்று விட்டதால் காங்கிரஸ் காரர்கள் சோர்ந்துவிட வில்லை. இந்த ஆட்சியை விட காங்கிரஸ் ஆட்சி பரவாயில்லை என்று சொல்லும் காலம் விரைவில் வரும். எதிலும் மோடி தன்னைத்தான் முன்னிலைப்படுத்துகிறார். விரைவில் அவரது சாயம் வெளுக்கப்போகிறது.

ஒரு காலத்தில் இந்தியை எதிர்த்து ஒன்று பட்டு போராடினோம். மீண்டும் மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிக்கிறது. எனவே, இந்தியை எதிர்த்து போராடும் காலம் விரைவில் வரும்.

காங்கிரஸ் ஆட்சியின் போது புகார்களில் சிக்கிய மந்திரிகள் நீக்கி வைக்கப்பட்டனர். ஆனால் இப்போது பாலியல் புகாரில் சிக்கியவர் கூட மத்திய மந்திரியாக இருக்கிறார். தேர்தலில் எப்படிப்பட்ட தலைவர்களுக்கும் சறுக்கல்கள் ஏற்படுவது சகஜம் தான்.

தமிழகத்தில் காங்கிரஸ் பூஜ்யம் தான் அதை ஒதுக்கி வைத்து விட்டால் நாம் ஜெயித்து விடலாம் என்று நம்மை ஒதுக்கி வைத்தவர்கள் (தி.மு.க.) நடந்து முடிந்த தேர்தலில் பூஜ்யம் ஆகி விட்டார்கள். காங்கிரஸ் மீது பழிபோட்டு தப்பி விடலாம் என்ற கனவு கண்டீர்கள். எல்லாம் கலைந்து விட்டது. இப்போது அங்கு இருந்து ஒரு பூ வும் போய் விட்டது.

எந்த மக்களால் நாம் புறக்கணிக்கப் பட்டோமோ அந்த மக்களால் மகுடம் சூட்டப்படும் காலம் மீண்டும் வரும். ஞானதேசிகன் அனைவரையும் அனுசரித்துக் செல்கிறார்.

சிறுசிறு மனத்தாங்கல்களை மறந்து எல்லோரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.