புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

அதிர்வில்லா ரயில் பயணத்துக்கு "பேலஸ்ட் லெஸ்' தண்டவாளங்கள் ரயில் விபத்துகள் தடுக்கப்படும்

அதிர்வில்லா ரயில் பயணத்துக்கும், ரயில் பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளாவதையும் தடுக்கும் வகையில் "பேலஸ்ட் லெஸ்' தண்டவாளங்கள் அமைக்கப்பட்டால் விபத்துகள் குறையும் என, ரயில்வே கட்டுமான தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

News image
Updated On :21 பிப்ரவரி 2015, 11:30 pm

அதிர்வில்லா ரயில் பயணத்துக்கும், ரயில் பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளாவதையும் தடுக்கும் வகையில் "பேலஸ்ட் லெஸ்' தண்டவாளங்கள் அமைக்கப்பட்டால் விபத்துகள் குறையும் என, ரயில்வே கட்டுமான தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

பேலஸ்ட் லெஸ் டிராக்ஸ் (ஆஹப்ப்ஹள்ற்-ப்ங்ள்ள் ற்ழ்ஹஸ்ரீந்ள்) ஜல்லி கற்கள் இல்லாமல் முழுவதும் காங்கிரீட்டினால் அமைக்கப்படும் ரயில் தண்டவாளங்கள் வட இந்தியாவின் சில பகுதிகளில் இப்போது அமைக்கப்பட்டு வருகிறது.

இவ்வகையான தண்டவாளங்கள் ரயிலில் அதிர்வில்லாத பயணத்தைத் தரக்கூடியதாகும். இதுபோன்ற புதிய முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு விரைவில் தரமான தண்டவாளங்கள் நாடு முழுவதும் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு அமைத்தால்தான் ரயில் பெட்டிகள் தடம்புரண்டு விபத்துகள் ஏற்படுவதையும், அதனால் உயிரிழப்புகளையும் தடுக்க முடியும்.

ரூ.300 கோடி செலவு: ரயில் தண்டவாளங்கள் துருப்பிடிப்பது ரயில்வே துறைக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. கடலோரப் பகுதிகளில் உள்ள ரயில் தண்டவாளங்கள் அதிகளவில் துருப்பிடிக்கின்றன. மேலும் ரயில்களில் இருந்து வெளியேறும் கழிவுகள் தண்டவாளங்களில் விழுவதும் துருப் பிடிக்க முக்கிய காரணம். இந்தப் பராமரிப்பு பணிகளுக்காகவே ஆண்டுக்கு ரூ.300 கோடி ரயில்வே துறை செலவு செய்கிறது. இந்தியாவில் சுமார் 25 ஆயிரம் ரயில் பெட்டிகள் உள்ளன, அதில் 500 பெட்டிகளில் மட்டுமே பயோ டாய்லெட் வசதி செய்யப்பட்டுள்ளன. அனைத்து ரயில்களிலும் பயோ டாய்லெட் வசதி கொண்டு வருவதற்கு சுமார் 15 ஆண்டுகளாகும். அதுவரை தண்டவாளங்கள் துருப்பிடிப்பதைத் தடுக்க முடியாது. ஆனால், இரும்பினால் அல்லாமல் வேறு உலோகங்களில் செய்யப்படும் ரயில் தண்டவாளங்கள் குறித்த ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆராய்ச்சிகளை லக்னெளவில் உள்ள ரயில்வே துறையின் ஆராய்ச்சி, வடிவமைப்பு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இப்போதைய நிலை: தண்டவாளங்களில் ஏற்படும் விரிசல்கள், கோளாறுகள் இப்போது உடனடியாக சரி செய்யப்படுகிறது. வெல்டிங் இயந்திரத்தின் மூலம் குறைந்தபட்சம் 15 நிமிஷங்களில் தண்டவாள குறைபாடுகள் சரி செய்யப்படுகின்றன. தண்டவாளங்களை பழுது பார்க்கும் நாளில் ரயில்களை இயக்கக்கூடாது. ஆனால், நம்முடைய ரயில் வழித்தடங்கள் பரபரப்பாக இயங்குவதால் சீரான பராமரிப்புகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுவதாக தெற்கு ரயில்வேயின் பொறியியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிக சுமை: இதுகுறித்து ரயில்வே துறையின் வடிவமைப்பு, தர நிர்ணய அதிகாரி கூறியது:

இந்திய ரயில்வேயில் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்துவது கடும் சவாலாக இருந்து வருகிறது. ஆண்டுதோறும் ரயில் பயணிகளின் எண்ணிக்கையும், ரயில்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆனால் ரயில் தண்டவாளங்களில் புதிய தொழில்நுட்பங்களை நாம் அறிமுகப்படுத்தவில்லை. இதனால் இப்போதுள்ள ரயில் தண்டவாளங்கள் அதிகளவிலான சுமையைத் தாங்கிக்கொண்டு உழைத்துக்கொண்டிருக்கின்றன.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ரயில் தண்டவாள கோளாறுகள், விரிசல்களால் ஆண்டுக்கு 40 விபத்துகள் ஏற்படும். ஆனால் இப்போது ரயில்வே பொறியாளர்களின் சீரிய முயற்சியால் இந்த விபத்துகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

பல நாடுகள் ரயில் தண்டவாளத்தில் புதுப்புது தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் நிலையில், இந்திய ரயில்வே தண்டவாளங்கள் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் துருப்பிடித்தே இருக்கின்றன. ஆண்டுதோறும் வெளியிடப்படும் பட்ஜெட்டில் ரயில் தண்டவாள தொழில்நுட்பம் குறித்த எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படுவதில்லை. 100 ரயில்கள் செல்ல வேண்டிய தண்டவாளத்தில், இப்போது 150 ரயில்கள் செல்கின்றன. இதனால் தண்டவாளத்தின் ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.