ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

சென்னை மாநகராட்சி வளாகத்தில் ‘அம்மா மாளிகை’ இன்று திறப்பு

சென்னை மாநகராட்சி வளாகத்தில் ரூ. 124 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அம்மா மாளிகையை முதல்வர் ஜெயலலிதா

Published On :

சென்னை மாநகராட்சி வளாகத்தில் ரூ. 124 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அம்மா மாளிகையை முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கிறார்.
 சென்னை மாநகராட்சி தலைமையகமாக ரிப்பன் கட்டடம் செயல்பட்டு வருகிறது. பழமையான இந்தக் கட்டடத்தில் இடவசதி இல்லாததால் பல்வேறு துறைகள் வளாகத்தில் உள்ள பிற கட்டடங்களில் இயங்கி வருகின்றன.
 இந்த நிலையில், புதிய கட்டடப் பணி தொடங்கப்பட்டு, தற்போது பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய கட்டடத்துக்கு "அம்மா மாளிகை' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 வாகன நிறுத்தம், குளிர்சாதன வசதி எனப் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டடத்தை செவ்வாய்க்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா காண் ஒலிக் காட்சி மூலம் திறந்து வைக்கிறார். அதன் பின்னர், மாநகராட்சியின் அனைத்து துறைகளும் புதிய கட்டடத்திலேயே இயங்கும். ரிப்பன் கட்டடத்தை அருங்காட்சியகமாக மாற்றவும் பிற கட்டடங்களை இடிக்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.