வாக்கைக் காப்போம், நாட்டைக் காப்போம்: நவ. 1-இல் தில்லி பேரணிக்கு ராகுல் காந்தி அழைப்பு ஆசிய பாரா விளையாட்டு: பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்!அதி தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் ’அர்னாப்’: வானிலை ஆய்வு மையம் தகவல்!

ஜிவி பிரகாஷின் இம்மோர்டல்: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

இம்மோர்டல் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து...

immortal

கயாது லோஹர் - ஜிவி பிரகாஷ் - படம்: எக்ஸ்

Updated On :

ஜிவி பிரகாஷ் குமாரின் இம்மோர்டல் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏகே பிலிம் பேக்டரி தயாரிப்பில் சக்தி பிலிம் பேக்டரி வெளியிட்ட இம்மோர்டல் திரைப்படத்தை இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கியிருந்தார்.

இந்தப் படம், கடந்த செப். 4 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது. இந்தப் படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.

கதாநாயகனாக நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் குமார், மகி எனும் கதாப்பாத்திரத்திலும், கயாது லோகர் சிந்து எனும் கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

மேலும் இந்தப் படத்தில் லொள்ளுசபா மாறன், கார்த்திக், குமார் நடராஜன், ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Story image

வாலிப மயக்கத்தில் அழகுக்கு ஆசைப்பட்டு ஆபத்தில் சிக்கிக் கொண்ட கதாநாயகன் அதிலிருந்து மீண்டு வந்தாரா? இல்லையா? என்பதே இம்மார்டல் திரைப்படத்தின் கதையாக எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இம்மோர்டல் திரைப்படம் அக். 30 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The OTT release date of GV Prakash Kumar's Immortal has been officially announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER