இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கைது! ராகுல், பிரியங்கா தொடர்ந்து பேரணி!தேர்தல் ஆணையம் நோக்கி சென்ற எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தம்! சாலையில் அமர்ந்து தர்னா!கேப்டன் பொறுப்பில் இருந்து ஹர்மன்பிரீத் கவுர் விலகல்! ‘முதுகில் குத்தும் தவெக அரசுக்கு செவிலியர்கள்தான் இரையா?’ - முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்தங்கம் சவரனுக்கு ரூ. 120 குறைவுசெவிலியர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்மதுராந்தகம்: வாக்குச்சாவடியில் இயந்திரத்தில் பழுது - வாக்குப்பதிவு நிறுத்தம்

பாரிஸ் கஃபே படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

பாரிஸ் கஃபே படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

paris cafe

பாரிஸ் கஃபே படத்தின் போஸ்டர் - படம்: எக்ஸ்

Published On :

பாரிஸ் கஃபே படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்மணி ரங்கநாதன் தயாரிப்பில் சரஜ் சீலன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், அனுமோள், அர்ச்சனா குமார், விஜய் விஷ்வா, சாய் விக்கி, நயனா உள்ளிட்டோர் நடித்து வெளியான திரைபடம் பாரிஸ் கஃபே.

ஒரு நேர்மையான மருத்துவர் சமூகப் பிரச்சனைக்காக அரசியல் அழுத்தங்களை எதிர்கொண்டால் என்ன செய்வார் என்பதை மையப்படுத்தி பாரிஸ் கஃபே திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இந்தப் படத்துக்கு கே இசையமைத்துள்ளார்.

இந்தத் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த அழகழகாய் மனம், தேன் பொழுதுகளே ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன.

இந்த நிலையில், பாரிஸ் கஃபே திரைப்படம் வரும் அக். 9 ஆம் தேதி ஆஹா மற்றும் அமேசான் பிரைம் ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளது.

Summary

The OTT release date for the movie *Paris Cafe* has been officially announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.