பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்வி.எஸ். பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் விஜய்!செப். 27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய அரசு தகவல்!100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

ஓடிடியில் வெளியாகும் அமானுஷ்யம், மர்மங்கள் நிறைந்த திரைப்படம்!

போட்டோகிராபர் படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

Published On :

போட்டோகிராபர் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரா என்ற படத்தின் நாயகனாக அறிமுகமானவர் நடிகை அஷ்ரப். இவர், தற்போது போட்டோகிராபர் என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ஆக. 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

நாயகனாக நடித்த அஷ்ரப், படத்தை இயக்கியும் உள்ளார். அவருக்கு ஜோடியாக ஜனனி சுவாமிநாதன் நடித்துள்ளார். ராஜ்குமார் சந்திரசேகரன் இசையமைத்துள்ளார்.

புகைப்படக் கலைஞரான அஷ்ரஃப், யாருடைய கண்களுக்கும் புலப்படாத, தங்க மரத்தை தேடி கொடைக்கானல் பகுதிக்குச் செல்ல திட்டமிடுகிறார். ஆனால், வழி தெரியாமல் திசைமாறி, அமானுஷ்யங்கள் நிறைந்த அடர்ந்த காட்டுக்குள் சிக்கிக்கொள்ளும் அவர், அங்கிருக்கும் மர்மங்களை எதிர்கொண்டு எவ்வாறு வெளியே வருகிறார் என்பதே படத்தின் மையக்கரு.

மேலும் இந்தப் படத்தில் ஆடுகளம் நரேன், கருணாகரன், உறியடி சிவா, வேலா ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, தேவி மகேஷ், ஜே.பி. ஜெய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

உளவியல் சார்ந்த சர்வைவல் த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள போட்டோகிராபர் படம், செப். 25 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகிறது.

Summary

The OTT release date for the movie Photographer has been officially announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.