FOLLOW US

ON GOOGLE DISCOVER

முதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!தவெக திட்டங்களுக்கு ’தாய்மாமன் காது குத்தும் திட்டம்’ எனப் பெயர் வைக்கலாம்! உதயநிதி ஸ்டாலின் நேபாள வெள்ளம்! பலி 1,252 ஆக உயர்வு! 4,875 பேர் காணவில்லை!சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை மொழியாக தமிழ்! தனித் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!சென்னையில் ஒலிம்பிக் நகரம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!சென்னையில் ரூ. 1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்: முதல்வர் விஜய்தங்கம் விலை அதிரடியாக உயர்வு! இன்றைய நிலவரம் (செப். 3)வாக்காளர் பட்டியலில் இருந்து ராகவ் சத்தா பெயர் நீக்கப்பட்டதால் பரபரப்புமேக்கேதாட்டு திட்டம்: விரைவில் ஒப்புதல் வழங்க மத்திய நீா் ஆணையத்திடம் கா்நாடகம் கோரிக்கைகொளத்தூரில் தவெக வெற்றி: மு.க.ஸ்டாலின் வழக்கில் இன்று தீா்ப்புகிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை: 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கம்தமிழகத்தின் சில மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவா்த்தனைகள் புதிய உச்சம்

டிசி முதல் ஜிடிஎன் வரை! இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! (செப். 4 - 11)

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து...

this week ott

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! - சித்திரிப்பு / விஜய்

Published On :3 செப்டம்பர் 2026, 7:13 pm IST

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

1டிசி

Listicle image

லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்து, இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வெளியான படம் டிசி.

இந்தத் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நாளை(செப். 4) வெளியாகிறது.

2ஜிடிஎன்

Listicle image

புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கைக் கதையில் நடிகர் மாதவன் நடித்துள்ளார். ஜி.டி. நாயுடுவாக மாதவன் நடிக்க, இப்படத்தை இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கியுள்ளார்.

இந்தப் படம் நாளை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

3உன்மத்தம்

Listicle image

கிரண் தாஸ் இயக்கத்தில், குஞ்சாக்கோ போபன் மற்றும் லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் வெளியான மலையாள கிரைம் த்ரில்லர் திரைப்படம் உன்மத்தம்.

இந்தத் திரைப்படம் நாளை சோனி லைவ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது.

4அனந்தன் காடு 

Listicle image

அனந்தன் காடு திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.

நடிகர் ஆர்யாவுடன் முரளி கோபி, நிகிலா விமல், இந்திரன், சுனில், ரெஜினா, தேவ் மோகன், சாந்தி பாலச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜியேன் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார்.

5கொரியன் கனகராஜு

Listicle image

வருண் தேஜ் நடிப்பில் வெளியான புதிய திரைப்படம் கொரியன் கனகராஜு. இந்தப் படத்தை மெர்லபாகா காந்தி இயக்கியுள்ளார்.

இந்தத் திரைப்படம் நாளை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

6தி கோர்ட்

Listicle image

நடிகை யோகலட்சுமி, தி கோர்ட் என்ற இணையத் தொடரில் பிரதான பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இந்தத் தொடரில் ஜெயபிரகாஷ், சஞ்சனா திவாரி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

இந்த இணையத் தொடர் நாளை முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது.

7ஜகமே சங்கீதம்

Listicle image

பாலநாத் சூர்ய பிரதாப் இயக்கத்தில் பிரகாஷ் ராஜ் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள ஜகமே சங்கீதம் இணையத் தொடரை சுஷ்மிதா கொனிடேலா தயாரித்துள்ளார்.

இந்தத் தொடர் நாளை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

8கடந்த வார ஓடிடி (அன்பே டயானா)

Listicle image

மில்லியன் டாலர் பிக்சர்ஸ் மற்றும் இரா எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் பாரி இளவழகன் எழுதி, இயக்கி, நடித்த திரைப்படம் அன்பே டயானா.

இந்தத் திரைப்படம் சோனி லைவ் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.

9பபிதா சிங் ரிப்போர்ட்டிங்

Listicle image

நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள கிரைம் த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் பபிதா சிங் ரிப்போர்ட்டிங்.

அம்பிகா பண்டிட் இயக்கியுள்ள இந்தப் படத்தை, அமேசான் பிரைம் ஓடிடியில் ஹிந்தி மொழியில் பார்க்கலாம்.

10சும்பக்

Listicle image

அதிஷ் கபாடியா இயக்கத்தில் நகைச்சுவை பாணியில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் சும்பக். இந்தப் படத்தில் இதில் நீனா குப்தா, தேவன் போஜானி, அர்ஜுன் பிஜ்லானி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஹிந்தி மொழியில் காணலாம்.

11பந்தர்

Listicle image

அனுராக் காஷ்யப் இயக்கத்தில் பாபி தியோல், சான்யா மல்ஹோத்ரா நடிப்பில் வெளியான திரைப்படம் பந்தர்.

இந்தத் திரைப்படம் ஜீ5 தளத்தில் ஹிந்தி மொழியில் காணக் கிடைக்கிறது

12லர்க்

Listicle image

நிஷாத் இயக்கத்தில் சைஜு க்ருப், அனுமோல், அஜு வர்கீஸ், பிரகாஷ் அலெக்ஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் லர்க்.

சர்வைவல் த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை, சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணலாம்.

13ஐ, நோபடி

Listicle image

நடிகர்கள் பிருத்விராஜ் சுகுமாரன், பார்வதி திருவோத்து, ஹக்கீம் ஷாஜகான் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஐ, நோபடி.

இந்தப் படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் காணக் கிடைக்கிறது.

Summary

Let’s take a look at which movies and web series are set to release on OTT platforms this week.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.