ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
1நூறு சாமி

நடிகர் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்து வெளியான நூறு சாமி திரைப்படம் நாளை (ஆக. 7) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இயக்குநர் சசியின் இயக்கத்தில், நடிகர்கள் ஸ்வாசிகா, அஜய் திக்ஷன், கருணாஸ், லிஜோமோல் ஜோஸ், பாலாஜி சக்திவேல், அருள்தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
2இதயம் முரளி

நடிகர்கள் அதர்வா, ஃபகத் ஃபாசில், பிரீத்தி முகுந்தன், கயாது லோஹர், ரக்ஷன், டிராவிட் செல்வம், நிஹாரிகா, ஏஞ்சலீன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கியுள்ளார்.
இந்தத் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது
3ஓ சுகுமாரி

ஐஸ்வர்யா ராஜேஷின் ஓ சுகுமாரி திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நாளை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தில் ஜான்சி, முரளிதர் கௌடே, ஆமினி, கவிரெட்டி ஸ்ரீனிவாஸ், கோட்டா ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
4உயிர்

நடிகர் ரோஷன் மேத்யூ நடிப்பில் உருவான உயிர் திரைப்படம் ஹாட் ஸ்டார் தளத்தில் காணக் கிடைக்கிறது.
இயக்குநர் எம். பத்மகுமார் இயக்கத்தில் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட திரைப்படம் உயிர். நாயகனாக நடிகர் ரோஷன் மேத்யூ காவல்துறை அதிகாரியாக இப்படத்தில் நடித்துள்ளார்.
5வதந்தி - 2

நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள வதந்தி - 2 இணையத் தொடர் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நாளை தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் வெளியாகவுள்ளது.
வதந்தி - 2 இணையத் தொடரில் நடிகர் சசிகுமார், மூஸா ராஜா எனும் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். மேலும், இத்தொடரில் நடிகர்கள் அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, அனகா, யஷ்வந்த் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
6லெனின்

முரளி கிருஷ்ணா அப்புரு இயக்கத்தில் அகில் அக்கினேனி, பாக்யஸ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் லெனின்.
1976 ஆம் ஆண்டின் பின்னணியில் நடக்கும் ஒரு கிராமத்துச் கதையாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் நாளை ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
7சத்தியத்தில் சம்பவித்தது

பிரசாந்த் மோகன் இயக்கத்தில் நடிகர்கள் ஆகாஷ் மெனன், திலீஷ் போத்தன், ஜானி ஆண்டனி, தில்ஷனா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சத்தியத்தில் சம்பவித்தது.
இந்தத் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.
8கடந்த வார ஓடிடி (கட்டா குஸ்தி - 2)

நடிகர் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் கடந்த ஜூலை 3 ஆம் தேதி வெளியான படம் கட்டா குஸ்தி - 2. இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கிய இப்படத்தை வேல்ஸ் ஃபில்ம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது.
இந்தத் திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
9சின்ன சின்ன ஆசை

நடிகர்கள் இந்திரன்ஸ், மதுபாலா மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் 'சின்ன சின்ன ஆசை'.
இந்தத் திரைப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில் பார்க்கலாம்.
10பாலன் தி பாய்

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் வெளியான பாலன் தி பாய் திரைப்படத்தில், முக்கிய கதாபாத்திரங்களில் ஆதிசேஷன், ஃபர்ஹானா பளதிங்கள் நடித்துள்ளனர்.
சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், ஜீ5 ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
11லவ் ஓ லவ்

மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் பவிஷ், நாக துர்கா நடிப்பில் வெளியான திரைப்படம் லவ் ஓ லவ். மேலும், இந்தப் படத்தில் கே.எஸ். ரவிக்குமார், செல்வராகவன், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் காணலாம்.
12ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை

ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை திரைப்படம் ஜீ5 ஓடிடியில் காணக் கிடைக்கிறது.
இந்தப் படத்தின் பிரதான பாத்திரங்களில் வருண் தவான், மிருணாள் தாக்குர், பூஜா ஹெக்டே ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை வருண் தவானின் தந்தையும் இயக்குநருமான டேவிட் தவான் இயக்கியிருந்தார்.
13ராவ் பகதூர்

சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ள ராவ் பகதூர் படத்தில் நடிகர் சத்யதேவ் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார்.
வெங்கடேஷ் மஹா எழுதி, இயக்கியுள்ள இந்தப் படத்தை, நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம்.
14ஹார்ட் பீட் - 3

தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரித்து வரும் ஹார்ட் பீட் இணையத் தொடரின் 3-வது சீசன் ஜூலை 30 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது.
முந்தைய சீசன்களில் நடித்த நடிகை அனுமோள், கார்த்திக் குமார், தீபா பாலு, தாபா, சாருகேஷ், சபரிஷ் உள்ளிட்டோர் மூன்றாம் பாகத்திலும் நடிக்கிறார்கள்.
Summary
Let take a look at which movies and web series are set to release on OTT platforms this week.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கட்டா குஸ்தி - 2! இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! (ஜூலை 31 - ஆகஸ்ட் 6)

கான் சிட்டி! இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! (ஜூலை 24 - 30)

மா இண்டி பங்காரம்! இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! (ஜூலை 17 - 23)

பரிமளா அண்ட் கோ! இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! (ஜூலை 10 - 16)
விடியோக்கள்

சர்க்கரை உண்மையிலேயே தவிர்க்கப்பட வேண்டியதா? | Health Care | Lifestyle




