FOLLOW US

ON GOOGLE DISCOVER

வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

மா இண்டி பங்காரம்! இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! (ஜூலை 17 - 23)

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து...

News image

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள். - சித்திரிப்பு / விஜய்

Updated On :16 ஜூலை 2026, 7:27 pm IST

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

1மா இண்டி பங்காரம்

Listicle image

சமந்தாவின் ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நாளை (ஜூலை 17) வெளியாகிறது.

சமந்தா கணவர் ராஜ் நிதிமோர் உருவாக்கத்தில் இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கியிருந்தார். சமந்தாவுக்கு கோலிவுட்டிலும் மார்கெட் இருப்பதால் தமிழிலும் டப் செய்து 'எங்கள் தங்கம்' என்ற பெயரில் படம் வெளியிடப்பட்டது.

2பவித்ரம் சீசன் 2

Listicle image

நடிகை சுரபி பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள பவித்ரம் இணையத் தொடரின் 2 ஆம் பாகம் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

கர்ப்பிணியான வேதா(சுரபி), தனது கணவர் விக்ரமுக்கு(ஸ்ரீகாந்த் சசிகுமார்) ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தில்லியில் தலைமறைவாக வாழ வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

மருத்துவமனையில் உள்ள நம்பிக்கைக்குரிய நண்பர்களின் உதவியுடன், தனது குழந்தையை பெற்றெடுக்க, எதிரிகளிடமிருந்து வரும் ஆபத்தான சவால்களை அவர் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதே மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்பட்டுள்ளது.

3மதுராபுரி சாதனா

Listicle image

சுயமாக சம்பாதித்து வீடுகட்ட நினைக்கும் நடுத்தர வர்க்கக் குடும்பத்தின் கதையாக மதுராபுரி சாதனா படம் எடுக்கப்பட்டுள்ளது.

சாய் தருண் ரெட்டி இயக்கத்தில் பரத் சாய்நாத் வர்மா, யாஷு மாஷெட்டி நடிப்பில் வெளியான இந்தப் படம் ஈடிவி வின் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.

4தி டெவில்

Listicle image

தனது மகனை முதல்வர் அரியணையில் அமர்த்த போராடும் முதல்வரின் கதையாக, அதிரடி மற்றும் த்ரில்லர் பாணியில், தி டெவில் படம் எடுக்கப்பட்டுள்ளது.

பிரகாஷ் இயக்கத்தில் தர்ஷன், ரச்சனா ராய், மகேஷ் மஞ்ச்ரேக்கர், அச்சுத் குமார், ஷர்மிளா மாண்ட்ரே, ரோஜர் நாராயண் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம் ஜீ5 தளத்தில் நாளை வெளியாகிறது.

5கொத்தப்பள்ளிலோ ஒக்காப்புடு

Listicle image

பிரவீணா பருச்சூரி இயக்கத்தில் மனோஜ் சந்திரா, மோனிகா டி, உஷா போனேலா, ரவீந்திர விஜய் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் கொத்தப்பள்ளிலோ ஒக்காப்புடு.

இந்தத் திரைப்படம் ஆஹா ஓடிடியில் நாளை வெளியாகிறது.

6கடந்த வார ஓடிடி (பல்டி)

Listicle image

நடிகர்கள் ஷேன் நிகம், சாந்தனு நடிப்பில் உருவான பல்டி திரைப்படம், சோனி லைவ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

உன்னி சிவலிங்கம் இயக்கிய இப்படம் கபடியை மையமாக வைத்து உருவாகியிருந்தது. நடிகர் சாந்தனு இரண்டாம் நாயகனாகவும் கேங்ஸ்டர் கதாபாத்திரங்களில் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், செல்வராகவன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

7பரிமளா அண்ட் கோ

Listicle image

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான பரிமளா அண்ட் கோ படத்தில் நடிகர்கள் ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, மிஷ்கின், சாண்டி, யோகி பாபு, சிங்கம்புலி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் கண்டு களிக்கலாம்.

8சிங் கீதம்

Listicle image

இயக்குநர் சிங்கீதம் சினீவாச ராவ் இயக்கிய சிங் கீதம் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இதில், முன்னணி நடிகர்களாக அயான், அஹில்யா, ஷாலினி ஆகியோர் நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

9பெத்தி

Listicle image

இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் நடிகர் ராம் சரண் நாயகனாக நடித்து வெளியான தெலுங்கு திரைப்படம் பெத்தி. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான இப்படத்தில் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்திருந்தார்.

இந்தத் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

10சாருகேசி

Listicle image

சாருகேசி படத்தில் ஒய்.ஜி. மகேந்திரன், சத்யராஜ், சமுத்திரக்கனி, சுஹாசினி, தலைவாசல் விஜய், ரம்யா பாண்டியன், ராஜ் ஐயப்பன், மதுவந்தி, சாய் தீனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அருண். ஆர் தயாரித்துள்ள இந்தப் படத்தை, இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

11ட்ரிகலா

Listicle image

ஷ்ரத்தா தாஸ், மாஸ்டர் மகேந்திரன் மற்றும் அஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ட்ரிகலா திரைப்படம், மர்மம் கலந்த த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணலாம்.

12லேண்ட் ஆப் ஃபுட்பால்

Listicle image

கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இணையத் தொடர் லேண்ட் ஆப் ஃபுட்பால் (Land Of Football).

இந்தத் தொடர் ஜியோ ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கிறது.

Summary

Let’s take a look at which movies and web series are set to release on OTT platforms this week.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.