/

ஓடிடியில் பார்க்க வேண்டிய த்ரில்லர் படங்கள்!

ஓடிடியில் பார்க்க வேண்டிய திரில்லர் படங்கள் குறித்து....

News image

ஓடிடியில் பார்க்க வேண்டிய த்ரில்லர் படங்கள்! - படங்கள்: எக்ஸ்

Updated On :14 ஜூலை 2026, 3:00 pm IST

ஓடிடி தளங்களில் காணக் கிடைக்கும் தமிழ், மலையாள த்ரில்லர் திரைப்படங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

1சம்பவம் அத்தியாயம் ஒன்னு

Listicle image

மலையாள மொழித் திரைப்படமான சம்பவம் அத்தியாயம் ஒன்னு படம் ஜியோ ஹாட் ஸ்டாரில் காணக் கிடைக்கிறது.

இந்தப் படத்தை ஜித்து சதீசன் மங்களத்து எழுதி, இயக்கியுள்ளார். மேலும் இந்தப் படத்தில் அஸ்கர் அலி, வினீத் குமார், சித்தார்த் பரதன், செந்தில் கிருஷ்ணா, அசிம் ஜமால் உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஓடிடி - ஹாட் ஸ்டார்

2காளிதாஸ் - 2

Listicle image

நடிகர் பரத் நடிப்பில் வெளியான காளிதாஸ் - 2 திரைப்படம் அமேசான் பிரைம், ஆஹா ஓடிடியில் கண்டு களிக்கலாம்.

ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் கொலை வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியாக பரத் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்கள் அஜய் கார்த்திக், பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஓடிடி - அமேசான் பிரைம்

3டிஎன்ஏ

Listicle image

இயக்குநர் நெல்சன் வெங்கடேஷன் இயக்கத்தில் நடிகர்கள் அதர்வா, நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் டிஎன்ஏ.

இந்தப் படத்தை ஜியோ ஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பார்க்கலாம்.

ஓடிடி - ஹாட் ஸ்டார்

4மகாராஜா

Listicle image

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, அபிராமி, அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் மகாராஜா.

இந்தத் திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

ஓடிடி - நெட்ஃபிளிக்ஸ்

5போர் தொழில்

Listicle image

இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளியான போர் தொழில் திரைப்படம்  சோனி லைவ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

இந்தப் படத்தில் காவல் அதிகாரிகளாக அசோக் செல்வன், சரத் குமார் நடித்துள்ளனர். இப்படத்திற்கு விக்னேஷ் ராஜா, ஆல்பிரட் பிரகாஷ் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளார்கள். 

ஓடிடி - சோனி லைவ்

6சூக்‌ஷமதர்ஷினி

Listicle image

நடிகை நஸ்ரியா நசீம் மற்றும் பாசில் ஜோசப் நடிப்பில் வெளியான ஒரு மலையாள மிஸ்டரி த்ரில்லர் திரைப்படம் சூக்‌ஷமதர்ஷினி.

இந்தப் படத்தை ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில், பார்த்து மகிழலாம்.

ஓடிடி - ஜியோ ஹாட் ஸ்டார்

7மார்கன்

Listicle image

மார்கன் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

விஜய் ஆண்டனி பிரதான பாத்திரத்திலும் விஜய் ஆண்டனி சகோதரியின் மகன் அஜய் திஷன், பிரிகடா, சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

ஓடிடி - அமேசான் பிரைம்

8லெவன்

ஓடிடி, திரையரங்கில் அசத்திவரும் லெவன் திரைப்பட போஸ்டர்கள்.

ஓடிடி, திரையரங்கில் அசத்திவரும் லெவன் திரைப்பட போஸ்டர்கள்.

படங்கள்: எக்ஸ் / நவீன் சந்திரா.

இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் லெவன். நவீன் சந்திரா, ரியா ஹரி, அபிராமி உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏஆர் என்டர்டைன்மென்ட் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி ஆகியோர் தயாரித்த இந்தப் படத்தை அமேசன் பிரைமில் காணலாம்.

ஓடிடி - அமேசான் பிரைம்

9கிஷ்கிந்தா காண்டம்

Listicle image

தின்ஜித் அய்யதன் இயக்கத்தில் ஆசிப் அலி, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் கிஷ்கிந்தா காண்டம்.

இந்தத் திரைப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

ஓடிடி - ஜியோ ஹாட்ஸ்டார்

10த்ரிஷ்யம் - 3

Listicle image

இயக்குநர் ஜீத்து ஜோசப் - நடிகர் மோகன் லால் கூட்டணியில் உருவாகி வெளியான புதிய படம் த்ரிஷ்யம் - 3. முதல் இரண்டு பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து அதே கதைகளத்தின் தொடர்ச்சியாக இப்படம் வெளியானது.

முதல் 2 பாகங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்கள் மீனா, அன்சிபா ஹாசன், எஸ்தர் அனில், ஆஷா சரத் ஆகியோர் 3 ஆவது பாகத்திலும் அதே பாத்திரங்களில் நடித்துள்ளனர். த்ரிஷ்யம் - 3 திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணலாம்.

ஓடிடி - அமேசான் பிரைம்

Summary

Let us take a look at the thriller movies available on OTT platforms

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.